"ஆளுநர் தமிழிசை செளந்தராஜனின் திடீர் அறிவிப்புகளுக்கு இது தான் காரணம்" நாராயணசாமி குற்றச்சாட்டு!!

"ஆளுநர் தமிழிசை செளந்தராஜனின் திடீர் அறிவிப்புகளுக்கு இது தான் காரணம்" நாராயணசாமி குற்றச்சாட்டு!!

புதுச்சேரியில் எம்.பி தேர்தலில் போட்டியிடுவதற்காகத் தான், ஆளுநர் பல்வேறு திட்டங்களுக்கு ஒப்புதல் அளித்து வருவதாக முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி குற்றம் சாட்டியுள்ளார் 

புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி எதிர்க்கட்சிகளின் கூட்டணி குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.இது குறித்து அவர் கூறியதாவது, "நாட்டில் உள்ள 26 கட்சிகளும், பல மாநில முதல்வர்களும் ஒன்றினைந்து இந்தியா என்ற மாபெரும் கூட்டணியை அமைத்து உள்ளனர். இந்த கூட்டணியை பார்த்து பிரதமர் மோடி மற்றும் அமீத்ஷா பயந்து போய் உள்ளனர்." எனக் கூறியுள்ளார்.

மேலும், " கூட்டணியின் ஒருங்கிணைப்பாளராக திமுக தலைவர் ஸ்டாலின் இருப்பதால் திமுக அமைச்சர்கள் மீது பொய் வழக்குப்போடப்பட்டு அமலாக்க துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். இந்த மிரட்டலுக்கு எதிர்கட்சிகள் அஞ்சாது" என்றும் கூறியுள்ளார்.

இதையும் படிக்க || மக்னாவை பிடிக்க களத்தில் இறங்கிய சின்னதம்பி!!

மேலும்," கடந்த காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப்படிப்பில் 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்க சட்ட முன் வரைவு கொண்டு வந்து ஆளுநர் கிரண்பேடிக்கு அனுப்பிய போது, அதற்கு ஒப்புதல் தராமல் மத்திய உள்துறை அமைச்சகத்தில் முடக்கப்பட்டது. அதனையடுத்து மாநில அரசு சார்பில் தனியாக அரசாணையும் பிறப்பிக்கப்பட்டது. ஆனால் மத்திய பாஜக அரசின் நிர்ப்பந்ததால், அப்போதைய தலைமை செயலாளர் நிராகரித்தார். இந்நிலையில், அரசு பள்ளி மாணவர்கள் மீது உண்மையான அக்கறை இருந்திருந்தால், கடந்த இரண்டரை ஆண்டுகளில் கிடப்பில் இருந்த சட்டமுன் வரைவு கோப்பிற்கு, ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் ஒப்புதல் பெற்று கொடுத்திருக்கலாமே! எத்தனை அரசுப்பள்ளி மாணவர்கள் பயனடைந்திருப்பார்கள்!" எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும்,  ஆளுநர் தமிழிசை செளந்தராஜனின் இந்த திடீர் புதிய அறிவிப்புக்கு காரணம், திருநெல்வேலி, கன்னியாக்குமரியில் தேர்தலில் நிற்க திறானி இல்லாததால், வரும் எம்.பி தேர்தலில் புதுச்சேரியில் நிற்க முடிவெடுத்து ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் இது போன்ற அறிவிப்புகளை வெளியிட்டு அரசியல் செய்து வருவதாக, குற்றம்சாட்டினார். 

இதையும் படிக்க || "I.N.D.I.A கூட்டணியை கண்டு பாஜக பயத்தில் நடுங்குகிறது" மம்தா பானர்ஜி !!