ஈத் உல்-அதாவிற்கு பிரதமர் மோடி வாழ்த்து!

ஈத் உல்-அதாவிற்கு பிரதமர் மோடி வாழ்த்து!

ஜூலை 10-ம் தேதி ஈத் உல்-அதாவை முன்னிட்டு மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும் இந்த பண்டிகை மனிதகுலத்தின்  நல்வாழ்வு மற்றும் செழிப்புக்கான உணர்வை மேலும் மேம்படுத்துவதற்காக அனைவரையும் உழைக்க ஊக்குவிக்கிறது என்றும் கூறியுள்ளார்.

இஸ்லாமியர்களால் கொண்டாடப்படும் இப்பண்டிகை, கடவுளுக்குக் கீழ்ப்படிவதற்கான தியாக உணர்வை நினைவுபடுத்துவதாக உள்ளது.

ஈத் முபாரக்! ஈத்-உல்-அதா நல்வாழ்த்துக்கள் எனவும் மனித குலத்தின் நல்வாழ்வு மற்றும் செழுமைக்கான உணர்வை மேலும் மேம்படுத்துவதற்கு இந்த பண்டிகை நம்மை ஊக்குவிக்கட்டும் எனவும் தனது ட்விட்டர் பக்கத்தில் பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ஆஷாதி ஏகாதசி வாழ்த்து:

மகாராஷ்டிராவில் குறிப்பாக விட்டல் பகவானைப் பின்பற்றுபவர்களால்  மரியாதையுடன் அனுசரிக்கப்படும் ஆஷாதி ஏகாதசியை முன்னிட்டும் பிரதமர் மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ஆஷாதி ஏகாதசி என்ற புனிதமான நாளில் வாழ்த்துக்கள் எனவு,ம்பகவான் விட்டல் பகவானின் ஆசீர்வாதங்கள்  எப்பொதும் நம் மீது நிலைத்திருக்கட்டும் எனவும்,  நமது சமூகத்தில் மகிழ்ச்சியை மேலும் அதிகரிக்கட்டும் எனவும் பிரதமர் மோடி தனது ட்வீட்டர் பக்கத்தில்  பதிவிட்டுள்ளார்.

மேலும், கடந்த ஆண்டு நவம்பரில், பந்தலூரில் ஆன்மீக சுற்றுலாவை மேம்படுத்தும் முக்கிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டிய பெருமை தனக்கு கிடைத்ததாகவும் இந்தியாவின் இளைஞர்களிடையே வார்காரி பாரம்பரியத்தை மேலும் பிரபலப்படுத்துவதற்கான எங்கள் முயற்சிகளின் ஒரு பகுதி இது எனவும் கூறியுள்ளார்.