தினக்கூலி ஊழியர்களாக அறிவிக்கக் கோரி போராட்டம்!

தினக்கூலி ஊழியர்களாக அறிவிக்கக் கோரி போராட்டம்!

ஜிப்மர் மருத்துவமனையில் 20 ஆண்டுகளாக பணிபுரியும் ஊழியர்களை தினக்கூலி ஊழியர்களாக அறிவிக்க வேண்டும்,மத்திய அரசின் குறைந்தபட ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 200க்கும் மேற்பட்ட ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

20 ஆண்டுகளுக்கும் மேலாக பணிபுரியும் ஊழியர்கள்

புதுச்சேரியில் உள்ள மத்திய அரசின் ஜிப்மர் மருத்துவமனையில் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக 550 க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிபுரிந்த வருகின்றனர். மேலும் தினக்கூலி அடிப்படையில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக பணிபுரியும் பணிபுரிந்து வரும் நிலையில் இதுவரை ஜிப்மர் நிர்வாகம் சார்பில் ஊழியர்களை தினக்கூலி என அறிவிக்கப்படவில்லை.

பேச்சுவார்த்தை நடத்தும் வரை போராட்டம்

இந்நிலையில் தினக்கூலி ஊழியர்களாக அறிவிக்க வேண்டும், மத்திய அரசின் குறைந்தபட்ச ஊதியத்தை வழங்க வேண்டும், ஊழியர்களுக்கு  செலுத்திய இ.பி.எப் மற்றும் சம்பள அறிக்கையை வழங்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர்.

இந்தக் கோரிக்கைகளை நிறைவேற்றக்க் கோரி 200-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியை புறக்கணித்து நிர்வாக அலுவலகம் முன்பு அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டு வருகிறர்.மேலும் இயக்குநர்  அழைத்து பேச்சுவார்த்தை நடத்தும் வரை போராட்டம் தொடரும் எனவும் ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.