புதுச்சேரி மின் தடை...வேலைநிறுத்தம்...சாலை மறியல்!

மின்துறை தனியார் மயமாக்கலுக்கு எதிர்ப்பு தெரிவித்து இரண்டாவது நாளாக மின்துறை தலைமை அலுவலகம் முன்பு 300 க்கும் மேற்பட்ட பொறியாளர்கள் மற்றும் ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

புதுச்சேரி மின் தடை...வேலைநிறுத்தம்...சாலை மறியல்!

புதுச்சேரி மின்துறையை தனியார் மயமாக்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து இரண்டாவது நாளாக மின்துறை ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

மின் துறை தனியார்மயம் 

புதுச்சேரி மின்துறையை தனியார் மயமாக்குவதற்கான ஒப்பந்தம் கடந்த 2 தினங்களுக்கு முன்பு கோரப்பட்டுள்ளது. இந்நிலையில் மின்துறையை தனியார் மயமாக்கும் நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் திரும்பப்பெறக்கோரி நேற்று முதல் புதுச்சேரி, காரைக்கால், மாஹே மற்றும் ஏனாம் பிராந்தியத்தில் உள்ள 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொறியாளர்கள் மற்றும் ஊழியர்கள்  காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கியுள்ளனர். 

ஊழியர்கள் போராட்டம் 

மின்துறை தனியார் மயமாக்கலுக்கு எதிர்ப்பு தெரிவித்து இரண்டாவது நாளாக மின்துறை தலைமை அலுவலகம் முன்பு 300 க்கும் மேற்பட்ட பொறியாளர்கள் மற்றும் ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் மின்துறை தனியார் மயமாக்கலுக்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டன கோஷங்களை எழுப்பினர். மின்துறை ஊழியர்களின் தொடர் வேலை நிறுத்தம் காரணமாக மின் கட்டணம் செலுத்துதல், மின் இணைப்பு உள்ளிட்ட பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது.

மக்கள் சாலை மறியல் 

மின்துறை ஊழியர்கள் போராட்டம் காரணமாக, புதுச்சேரியின் பல்வேறு பகுதிகளில் ஏற்பட்டுள்ள மின்வெட்டை சரி செய்யப்படாமல் உள்ளது. இதனால் மின்தடையை சரி செய்யக்கோரி பொதுமக்கள் ஆங்காகே சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். உருளையன்பேட்டை தொகுதி மக்கள் புதிய பேருந்து நிலையம் எதிரே உள்ள சாலையில் மறியலில் ஈடுபட்து வருகின்றனர். பேருந்து நிலையத்திலிருந்து பேருந்துகள் வெளியே செல்ல முடியாமலும், பேருந்துகள் உள்ளே வர முடியாமலும் உள்ளூர் மற்றும் வெளியூர் பேருந்து சேவை முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனிடையே மின்துறை தனியார் மயமாக்கலை திரும்பப்பெறும் வரை காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் தொடரும் என மின்துறை ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.