பாஜக தேர்தல் கலந்துரையாடல்...ஆளுநர் பங்கேற்றதால் சர்ச்சை!

ஆளுநர் மாளிகையை பாஜக அலுவலகமாக மாற்றி செயல்பட்டு வருவதாகவும் திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றனர்.

பாஜக தேர்தல் கலந்துரையாடல்...ஆளுநர் பங்கேற்றதால் சர்ச்சை!

தென் இந்தியாவிற்கான பாஜகவின் 2024 தேர்தல் வியூகம் என்ற சமூக வலைதள கலந்துரையாடலில் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கலந்துகொண்ட சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ஆளுநர் தமிழிசை

தெலுங்கானா ஆளுநர் மற்றும் புதுச்சேரியின் பொறுப்பு துணை நிலை ஆளுநராக பொறுப்பு வகித்து வரும் தமிழிசை சௌந்தர்ராஜன் தொடர்ந்து தனது அதிகாரத்தை மீறி பாஜக முகவராக செயல்பட்டு வருவதாகவும் குற்றாச்சாட்டு நிலவுகிறது. ஆளுநர் மாளிகையை பாஜக அலுவலகமாக மாற்றி செயல்பட்டு வருவதாகவும் திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றனர். மேலும் தமிழிசை சவுந்தரராஜன் தான் ஆளுநர் என்பதை மறந்து தொடர்ந்து, நடுநிலை தவறி தொடர்ந்து ஒரு சார்பான அரசியல் கருத்துகளையும் பொதுவெளியில் கூறி வருகிறார்.

பாஜக தேர்தல் கலந்துரையாடல்

இந்நிலையில் எதிர்கட்சிகளின் குற்றச்சாட்டுகளை நிரூபிக்கும் வகையில், துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தனது அதிகாரப்பூர்வ டிவிட்டர் கணக்கிலிருந்து “தென் இந்தியாவிற்கான பாஜகவின் 2024 தேர்தல் வியூகம்” என்ற டிவிட்டர் ஸ்பேஸஸில் கலந்து கொண்டது தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

நடுநிலையாக இருக்க வேண்டிய ஆளுநர் தற்போது முற்றிலும் பாஜக முகவராகவும், ஆர்எஸ்எஸ் பிரமுகராகவும் செயல்பட்டு வருவதாக அரசியல் கட்சிகள் மற்றும் பல்வேறு சமூக அமைப்புகள் தமிழிசை சவுந்தரராஜனுக்கு எதிராக சமூக வலைதளங்களில் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.