ஆகஸ்ட் மாதம் 16-ம் தேதி முதல் பள்ளிகள் திறப்பு!

ஆந்திராவில் வருகிற ஆகஸ்ட் மாதம் 16-ம் தேதியன்று பள்ளிகளை திறக்க அம்மாநில அரசு திட்டமிட்டுள்ளது.

ஆகஸ்ட் மாதம் 16-ம் தேதி முதல் பள்ளிகள் திறப்பு!

ஆந்திராவில் வருகிற ஆகஸ்ட் மாதம் 16ம் தேதியன்று பள்ளிகளை திறக்க அம்மாநில அரசு திட்டமிட்டுள்ளது.

கொரோனா எதிரொலியாக, ஆந்திராவில் பள்ளி கல்லூரிகள் மூடப்பட்டன. இதனால் வகுப்புகள் அனைத்தும் ஆன்லைன் மூலம் நடத்தப்பட்டு வருகின்றன. தற்போது வரை மாணவர்களின் நலன் கருதி, ஆந்திர மாநிலத்தில் இன்னும் பள்ளிகள் திறக்கப்படவில்லை. தற்போது கொரோனா ஓரளவு கட்டுக்குள் வந்துள்ள நிலையில், பள்ளிகளை திறக்க ஆந்திர அரசு முடிவு செய்துள்ளது.

அந்தவகையில், ஆந்திராவில் ஆகஸ்ட் மாதம் 16ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்றும், ஆன்லைன் வகுப்புகள் வருகிற 12ம் தேதி துவங்கும் எனவும் அம்மாநில கல்வித்துறை தெரிவித்துள்ளது.