தொடரும் இலங்கை கடற்படையின் அட்டூழியம்... மீண்டும் 9 மீனவர்கள் கைது!!

தொடரும் இலங்கை கடற்படையின் அட்டூழியம்... மீண்டும் 9 மீனவர்கள் கைது!!

நெடுந்தீவு அருகே எல்லை தாண்டி மீன்பிடித்ததாக தமிழ்நாடு மீனவர்கள் 9 பேரை இலங்கை கடற்படை கைது செய்த சம்பவம் மீனவ மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழ்நாட்டு மீனவர்கள், கச்சத்தீவு மற்றும் நெடுந்தீவு பகுதிகளில் மீன் பிடித்து வருவது வழக்கம். அப்பொழுது எல்லையில், ரோந்து பணிகளில் ஈடுபட்டிருக்கும் இலங்கை கடற்படை, தமிழ்நாடு மீனவர்கள் எல்லை தாண்டாவிட்டாலும், எல்லை தண்டி மீன் பிடிப்பதாக குற்றம் சாட்டி, மீனவர்களை சிறைபிடித்துச் சென்று சித்ரவதை செய்வதும், அவர்கள் பிடித்த மீன்களை அபகரித்தும், வலைகளை சீரழித்தும், படகுகளை அபகரித்து நாட்டுடமையாக்கியும் பல அட்டூழியங்களை மேற்கொண்டு வருகிறது. 

இந்நிலையில், இன்று மண்டபத்தை சேர்ந்த 9 மீனவர்கள், 2 விசைப்படகுகளில் நெடுந்தீவு அருகே மீன் பிடித்து கொண்டிருக்கும் பொழுது, அங்கு வந்த இலங்கை கடற்படை, 9 மீனவர்களை, கைது செய்து, படகுகளையும் அபகரித்துச் சென்றுள்ளனர். தற்போது, நெடுந்தீவு அருகே கைதான 9 மீனவர்களை காங்கேசன் துறைமுகத்தில் வைத்து இலங்கை கடற்படை விசாரணை மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

தொடர்ந்து தமிழ்நாட்டு மீனவர்கள் 9 பேரை இலங்கை கடற்படை கைது செய்து அட்டூழியம் செய்வதால், மக்கள் கொந்தளித்துள்ளனர். இலங்கை கடற்படையின் தொடர் அராஜகத்தால் மீனவ மக்கள் கடும் இன்னலுக்கு ஆளாகி வருகின்றனர். காலம் காலமாக இந்த அராஜகம் தொடர்ந்து நடக்கும் பட்சத்தில், இவற்றை ஏன் அரசு தலையீட்டு, இலங்கை கடற்படையின் அட்டூழியத்தை முடிவுக்கு கொண்டுவர தயங்குகிறது என சமூக ஆர்வலர்களும், மக்களும் கேள்வி எழுப்புகின்றனர்.

இதையும் படிக்க || "செந்தில் பாலாஜிக்கு சிறையில் எவ்வித சிறப்பு வசதிகளும் இல்லை" அமைச்சர் ரகுபதி!!