கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு ஸ்மார்ட்போன்...

கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு ஸ்மார்ட்போன்...

கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகலுக்கு அவசர கால உதவி எண்களுடன் ஸ்மார்ட் போன் வழங்கப்படும் என தெலுங்கான அரசு அறிவித்துள்ளது.

உலகேயே உலுக்கும் கொரோனா தொற்றால் லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு பலர் உயிரிழந்துள்ளனர். கொரோனா தொற்றை கட்டுப்படுத்த அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. ஆனால் கொரோனா தொற்றால் வயது வித்தியாசம் இன்றி உயிரிழப்பதால் பல குழந்தைகள் பெற்றோரை இழந்து கஷ்டப்பட்டு கொண்டு இருக்கின்றன.

இந்நிலையில் அரசுகள் அளிக்கும் சலுகைகளும், ஊக்கத்தொகைகளும் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு உதவிகரமாக இருந்துவருகிறது. தெலுங்கானா மாநிலத்தில் இதுவரை 200 குழந்தைகள் பெற்றோரை இழந்துள்ளனர். 

இந்த வகையில் பெற்றோரை இழந்து தவிக்கும் குழந்தைகளுக்கு அவசர கால உதவி எண்களுடன் ஸ்மார்ட் போன் வழங்க மகளிர் மேம்பாடு மற்றும் குழந்தைகள் நலத்துறை முடிவெடுத்துள்ளனர். இந்த ஸ்மார்ட் போன்களில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரி,காவல்துறை உள்ளிட்ட அவசர அழைப்பு எண்கள் இருக்கும்.

மேலும் இதன் மூலம் குழந்தைகளுக்கு தேவையான உதவிகளை உடனடியாக செய்யமுடியும் என்றும் ஸ்மார்ட் போன் குறித்து குழந்தைகளுக்கு ஆலோசனைகள் வழங்கப்படும் என ஹைதராபாத் மாநில நலத்துறை அதிகாரி அக்கேஸ்வர் ராவ் தெரிவித்துள்ளார்.