சித்தராமையாவுக்கு கொலை மிரட்டல்…பாதுகாப்பை பலப்படுத்த அரசு உத்தரவு!

சித்தராமையாவுக்கு கொலை மிரட்டல்…பாதுகாப்பை பலப்படுத்த அரசு உத்தரவு!

கர்நாடக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் சித்தராமையாவுக்கு வந்த கொலை மிரட்டல் அழைப்பு குறித்து விரிவான விசாரணை நடத்த கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை உத்தரவிட்டுள்ளார். சாவர்க்கர் மீதான சர்ச்சைக்கு மத்தியில் தனக்கு கொலை மிரட்டல் அழைப்புகள் வருவதாக சித்தராமையா கூறியதை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இந்தப் பிரச்சினையை நாங்கள் தீவிரமாக எடுத்துக் கொண்டுள்ளோம். நானும் டிஜியை அழைத்து பேசினேன். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்துவார்கள். எதிர்க்கட்சித் தலைவருக்கு தகுந்த பாதுகாப்பு வழங்க அறிவுறுத்தி உள்ளேன் எ ன    கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை கூறியுள்ளார். கடந்த ஆகஸ்ட் 17 அன்று பாரதிய ஜனதா கட்சியினர் சித்தராமையாவின் காரை நிறுத்தி, அவரது வாகனத்தின் மீது முட்டைகளை வீசினர். மழையால் பாதிக்கப்பட்ட குடகு மாவட்டத்தில் மக்களை சந்திக்க மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம் செய்ய முயன்றபோது அவருக்கு கருப்புக்கொடி காட்டினர்.

இந்த சம்பவம் பற்றி ஒரு நிகழ்ச்சியில் உரையாற்றிய சித்தராமையா பேசுகையில், "இவர்கள் காந்தியை கொலை செய்தனர். என்னை விட்டுவிடுவார்களா?  என்று கூறினார்.

சாவர்க்கரின் போஸ்டர்களை ஒட்டி போராட்டம் நடத்தினார்கள், ஆங்கிலேயர்களிடம் மன்னிப்பு கேட்டவரை வீர் சாவர்க்கர் என்று அழைத்தனர். எனக்கு சாவர்க்கர் மீது தனிப்பட்ட பகையோ கோபமோ இல்லை. அவரும் ஒரு மனிதர்தான். அவரது நடத்தை சரியாக இல்லை" என்று காங்கிரஸ் சட்டமன்ற கட்சி தலைவர் சித்தராமையா கூறினார்.

முஸ்லீம்கள் பெரும்பான்மையாக உள்ள பகுதியில் பாஜக உறுப்பினர்கள் சாவர்கரின் படம் உள்ள சுவரொட்டியை ஒட்டியதைத் தொடர்ந்து சாவர்கரின் சுவரொட்டி குறித்த சர்ச்சை தொடங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.