இந்தியாவிற்கான யுனிசெஃப் பிரதிநிதி யசுமாசா கிமுரா வாழ்த்து  அறிக்கை:

இந்தியாவிற்கான யுனிசெஃப் பிரதிநிதி யசுமாசா கிமுரா வாழ்த்து  அறிக்கை:

200 கோடி  டோஸ் கோவிட்-19 தடுப்பூசியை வழங்கியதில்  குறிப்பிடத்தக்க மைல்கல்லை எட்டியதற்காக, இந்தியாவை யுனிசெஃப் பிரதிநிதி யசுமாசா கிமுரா வாழ்த்தியுள்ளார் . 

இந்தியா சாதனை:

இந்திய பிரதமரின் வழிகாட்டுதலில், பல நடிகர்களின் இடைவிடாத முயற்சிகளாலும் , சுகாதார மற்றும் முன்கள  பணியாளர்களின் மகத்தான பணிகளாலும்  200 கோடி தடுப்பூசி  சாதனை சாத்தியமாக்கியுள்ளது என பாராட்டியுள்ளார்.

இந்தியா போன்ற பரந்த பன்முகத்தன்மை கொண்ட நாட்டின் அனைத்து பகுதிகளிலும் 18 மாதங்களில் இரண்டு பில்லியன் டோஸ் தடுப்பூசிகளை வழங்கியுள்ளது, அல்லும் பகலும்   அயராது உழைத்த சுகாதார ஊழியர்களின் திறமை மற்றும் அர்ப்பணிப்புக்கான ஒரு அற்புதமான சாதனையாகும் என்றும் குறிப்பிட்டுள்ளார். மீண்டும் மீண்டும் தொற்றுநோய் அலைகள், சீரற்ற வானிலை, கடினமான நிலப்பரப்பு மற்றும் எளிதாக செல்ல இயலாத பகுதிகள் என அதிக  சவால்கள் இருந்தபோதிலும் இச்சாதனையை நிகழ்த்தியுள்ளது பாராட்டுதற்கு உரியது எனவும் கூறியுள்ளார் .

பணியாளர்கள் அர்ப்பணிப்பு:

 சமமான முறையில் அனைவருக்கும் தடுப்பூசிகள் சரியான நேரத்தில் கிடைப்பதை உறுதி செய்த விஞ்ஞானிகள், சுகாதாரப் பணியாளர்கள், தடுப்பூசி உற்பத்தியாளர்கள் மற்றும் கொள்கை வகுப்பாளர்களின் கடின உழைப்பைக் கௌரவிக்கும் நேரம் இது எனவும் தெரிவித்துள்ளார். துல்லியமான திட்டமிடலுடன்  தொலைநோக்குப் பார்வையால் உந்தப்பட்டு இந்தியா இந்த மைல்கல்லை வெற்றிகரமாக எட்டியுள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளார் .

யுனிசெப்-ன் பங்கு:

 தொற்றுநோய் பதிவின் ஆரம்பத்தில்  இருந்து அதற்கு தேவையான அனைத்து உபகரணங்களையும் இந்தியாவிற்கு யுனிசெப் வழங்கியதை எண்ணி இத்தருணத்தில் பெருமையடைகிறது எனவும் கூறியுள்ளார்.

 கோவிட்-19 வைரஸ் பரவுவதைத் தடுப்பதற்கும், இந்தியாவின் தடுப்பூசி இயக்கத்தை மேலும் துரிதப்படுத்துவதற்கும் தேவையான நடவடிக்கைகளை மேம்படுத்துவதற்கான  தேசிய தகவல் தொடர்பு பிரச்சாரங்களில் இந்தியாவின்  சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்திற்கு  யுனிசெஃப் தொடர்ந்து ஆதரவளிக்க தயாராக இருப்பதாகவும் கூறியுள்ளார் . தடுப்பூசிக்கு எதிரான கட்டுக்கதைகள், தவறான தகவல்களை பரப்புதல்  போன்றவற்றை எதிர்த்து சரியான நேரத்தில் துல்லியமான தகவல்களைப் பரப்பி   அரசாங்கத்தின் தடுப்பூசித் திட்டத்தாய் வெற்றிப்பெற செய்ததில் யுனிசெஃப் உறுதுணையாக இருந்ததை எண்ணி பெருமைகொள்வதாகவும் யுனிசெஃப் சார்பில் தெரிவித்துள்ளார்.