விம்பிள்டன் டென்னிஸ்: சாம்பியன் பட்டம் வென்று அல்காரஸ் சாதனை!

விம்பிள்டன் டென்னிஸ்: சாம்பியன் பட்டம் வென்று அல்காரஸ் சாதனை!

விம்பிள்டன் டென்னிஸ் இறுதிப் போட்டியில் ஜோகோவிச்சை வீழ்த்தி முதல் முறையாக சாம்பியன் பட்டத்தை வென்று அல்காரஸ் சாதனை படைத்துள்ளாா். 

கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நடைபெற்று வந்தது. இதில் ஆண்கள் ஒற்றையர் இறுதிப் போட்டியில் 23 கிராண்ட்சிலாம் பட்டம் வென்ற சாதனையாளரும், தரவரிசையில் 2-வது இடத்தில் இருப்பவருமான செர்பியா வீரா் ஜோகோவிச், உலகின் முதல் நிலை வீரரான ஸ்பெயினின் கார்லோஸ் அல்காரசுடன் மோதினார். Wimbledon 2023 Final Live Streaming: When and where to watch Alcaraz vs  Djokovic | Tennis News - Hindustan Times

இதில், முதல் செட்டை ஜோகோவிச் 6-1 என்ற நோ் செட் கணக்கில் எளிதில் கைப்பற்றினார். சுதாரித்துக் கொண்ட அல்காரஸ் 2-வது செட்டை 7-6 என்ற செட் கணக்கில் போராடி வென்றார். மேலும் மூன்றாவது செட்டையும்  6-2 என அல்காரஸ் கைப்பற்றினார். அதிரடி காட்டிய ஜோகோவிச் நான்காவது செட்டை 6-3 என்ற செட் கணக்கில் கைப்பற்றினார். Carlos Alcaraz overcomes Novak Djokovic in five-set thriller to win first  Wimbledon title | CNN

வெற்றியாளரை நிர்ணயிக்கும் 5-வது செட்டை அல்காரஸ் 6-4 என்ற கணக்கில் கைப்பற்றினார். இறுதியில், அல்காரஸ் 1-6, 7-6, 6-1, 3-6, 6-4 என்ற நோ் செட் கணக்கில் கைப்பற்றி சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார்.  சுமார் 4.45 மணி நேரத்துக்கும் மேலாக நடைபெற்ற இந்தப் போட்டியில் விம்பிள்டன் பட்டத்தை அல்காரஸ் முதல் முறையாக கைப்பற்றி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க:மேகதாது அணை விவகாரம்: "கண்டிக்காமல் திரும்பினால், முதலமைச்சருக்கு எதிராக கருப்புக்கொடி போராட்டம்" அண்ணாமலை எச்சரிக்கை !