தொடரும் இந்திய வம்சாவளியினரின் சாதனைகள்... 12 வயதில் கிராண்ட் மாஸ்டர் பட்டம் சிறுவன்...

அமெரிக்காவை சேர்ந்த இந்திய வம்சாவளி சிறுவன் 12 வயதிலேயே கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்று சாதனை படைத்துள்ளான்.

தொடரும் இந்திய வம்சாவளியினரின் சாதனைகள்... 12 வயதில் கிராண்ட் மாஸ்டர் பட்டம் சிறுவன்...
ஹங்கேரி தலைநகர் புத்தபெஸ்ட் நகரில்  உலக கிராண்ட் மாஸ்டர் சதுரங்கப் போட்டி நடைபெற்றது. இதில் இந்தியாவின்  லியோன் மெண்டோன்கா மற்றும் அமெரிக்காவின் நியூ ஜெர்சி மாகாணத்தைச் சேர்ந்த இந்திய வம்சாவளி சிறுவனான அபிமன்யு மிஸ்ரா ஆகியோர் மோதினர்.
 
இதில், லியோன் மெண்டோன்கா இந்தியாவின் 67வது சதுரங்க கிராண்ட் மாஸ்டர் ஆவார். இந்த போட்டியில் லியோன் மெண்டோன்காவை வீழ்த்திய அபிமன்யு மிஸ்ரா, உலகின் இளம் வயது கிராண்ட் மாஸ்டர் என்ற புதிய சாதனையை படைத்துள்ளார். 12 வயது 4 மாதங்கள் 25 நாட்களில்  கிராண்ட் மாஸ்டர் பட்டத்தை வென்று இந்த சாதனையை அபிமன்யு மிஸ்ரா படைத்துள்ளார்.