ஒலிம்பிக் போட்டியில் அசத்தும் இந்திய வீரர்கள்: 2வது பதக்கத்திற்காக ஆவலுடன் எதிர்பார்த்திருக்கும் இந்தியா...

டோக்கிய ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்றுள்ள இந்திய வீரர்கள் பலர் கால் இறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளதால், அடுத்த பதக்கத்திற்கான ஆர்வம் அதிகரித்துள்ளது. 

ஒலிம்பிக் போட்டியில் அசத்தும் இந்திய வீரர்கள்: 2வது பதக்கத்திற்காக ஆவலுடன் எதிர்பார்த்திருக்கும் இந்தியா...
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் சர்வதேச அளவிலான ஒலிம்பிக் போட்டியானது கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா சார்பில் 49 கிலோ எடை பிரிவு பழுதூக்கும் போட்டியில் பங்கேற்ற மீராபாய் சானு, வெள்ளிப்பதக்கத்தை பெற்று நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளார். 
 
இங்கிலாந்து, சீனா உள்ளிட்ட நாடுகளை ஒப்பிடுகையில் ஒரு பதக்கத்துடன் பின்தங்கியிருந்தாலும், இந்தியா வீரர்கள் பலர் கால் இறுதிச்சுற்றுக்கு முன்னேறி வருகின்றனர். அதன் மகளிர் குத்துச்சண்டையில் மேரி கோம் கால் இறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறியுள்ளார். அவரைத்தொடர்ந்து பி.வி சிந்து, பேட்மிண்டன் மகளிர் ஒற்றையர் பிரிவில்,இன்று டென்மார்க் வீராங்கனையை தோற்கடித்து கால் இறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளார். 
 
அதேபோல் ஆண்கள் ஹாக்கி ஏ பிரிவு போட்டியில், இந்தியா 3-1 என்ற கோல் கணக்கில் அர்ஜென்டினாவை வீழ்த்தி கால் இறுதிக்கு முன்னேறியுள்ளது.ஒலிம்பிக் வில்வித்தை போட்டியின் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் அதானு தாஸும், சீன வீரரை 6க்கு 4 என்ற புள்ளி கணக்கில் தோற்கடித்து கால் இறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறியுள்ளார். 

 
அதுமட்டுமல்லாது, 91 கிலோ எடை பிரிவின்  கீழ் ஆண்களுக்கான குத்துச்சண்டை போட்டியில் இந்தியாவின் சதீஷ்குமார், ஜமைக்கா வீரர் ரிகார்டோ பிரவுனை தோற்கடித்து கால் இறுதிக்கு முன்னேறியுள்ளது.
இந்திய வீரர் வீராங்கனைகளின் இந்த முன்னேற்றம், அடுத்த பதக்கம் கிடைப்பதற்காக எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்துள்ளது.