ஓய்வு பெறும் கிரிக்கெட் வீரர்... கிரிக்கெட் ரசிகர்கள் கவலை...

இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் பென் ஸ்டோக்ஸ் அனைத்து விதமான சர்வதேச போட்டிகளிலிருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

ஓய்வு பெறும் கிரிக்கெட் வீரர்... கிரிக்கெட் ரசிகர்கள் கவலை...
இங்கிலாந்து அணியின் ஆல்ரவுண்டராக விளையாடி வருபவர் பென் ஸ்டோக்ஸ். சர்வதேச அளவில் தனது திறமையால் ரசிகர் பட்டாளத்தைப் பெற்றுள்ள இவர் இங்கிலாந்து அணி ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை வெல்லக் காரணமாக இருந்தார்.1991ஆம் ஆண்டு நியூசிலாந்தில் கிறிஸ்ட்சேர்ச் நகரத்தில் பிறந்தவர் பென் ஸ்டோக்.
 
இளம் வயதில் இங்கிலாந்துக்கு இடம்பெயர்ந்த இவர் உள்ளூர் கிரிக்கெட் அணிகளில் பங்கேற்று விளையாடத் தொடங்கினார். படிப்படியாக முன்னேறி இங்கிலாந்து அணியில் ஆல் ரவுண்டராக கலக்கி வந்தார்.
 
இந்நிலையில்  அனைத்து வகையான சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். அவரது இந்த அறிவிப்பு கிரிக்கெட் ரசிகர்களை கவலையடைய செய்துள்ளது.