எதிர்பாக்கலல.. "ரெய்னாவுக்கு".. "சிஎஸ்கே" இப்படி செய்யும்-னு எதிர்பாக்கலல.. வியந்து போன சின்ன தல ரசிகர்கள்!!

ரெய்னாவுக்கு சிஎஸ்கே அணி நிர்வாகம் செய்த சம்பவம். ரசிகர்களை வியப்படைய செய்துள்ளது.

எதிர்பாக்கலல.. "ரெய்னாவுக்கு".. "சிஎஸ்கே" இப்படி செய்யும்-னு எதிர்பாக்கலல.. வியந்து போன சின்ன தல ரசிகர்கள்!!

ரசிகர்களால் "சின்ன தல" என்று செல்லமாக அழைக்கப்படும் ரெய்னா-வை இந்த முறை எந்த அணியும் ஏலத்தில் எடுக்கவில்லை.. ஏன் சிஎஸ்கே கூட எடுக்கவில்லை.. இதனால் கடுப்பான ரசிகர்கள்.. சிஎஸ்கே அணி ரெய்னா முதுகில் குத்திவிட்டது என குற்றம் சாட்டினார்.

இந்நிலையில், சிஎஸ்கே அணியை விட்டு கொடுக்காமல் தொடர்ந்து ஆதரித்து வருகிறார் ரெய்னா. சமீபத்திய பேட்டி ஒன்றில் கூட சிஎஸ்கே அணியை பெரிதும் இம்முறை எதிர்பார்ப்பதாகவும், சிஎஸ்கே வீரர்கள் மொயின் அலி, ருத்துராஜ் குறித்தும் ரெய்னா பாராட்டி பேசினார். இதனை பார்த்தால் ரெய்னா-வுக்கு இன்னும் சிஎஸ்கே மீது பாசம் குறையாமல் தான் உள்ளது போல..!!

இந்நிலையில், ரெய்னாவின் மகன் ரியோ இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இது குறித்து சிஎஸ்கே அணி தனது ட்விட்டர் பக்கத்தில், லியோவுக்கு பிறந்தநாள் வாழ்த்து செய்தியை வெளியிட்டுள்ளது. இதை சற்றும் எதிர்பார்க்காத ரெய்னா ரசிகர்கள், சிஎஸ்கே பழைய விஷயங்களை இன்னும் மறக்கவில்லை என நெகிழ்ச்சியில்  உள்ளனர்.