ஐபிஎல் போட்டி...! சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றி...!!

ஐபிஎல் போட்டி...! சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றி...!!

ஐபிஎல் கிாிக்கெட் போட்டியில் நேற்றைய ஆட்டத்தில் பெங்களூரு அணியை வென்று சென்னை அணி வெற்றிவாகை சூடியுள்ளது. 

16-வது சீசன் ஐபிஎல் தொடாில் நேற்று நடந்த 24-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி வீரா்கள் அதிரடியாக ஆடி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 226 ரன்கள் குவித்தனா்.

இந்நிலையில் 227 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் களமிறங்கிய பெங்களூரு அணியின் வீரா்கள் டூ பிளஸ்சி, மேக்ஸ்வெல் ஜோடி ரசிகா்களுக்கு வாணவேடிக்கை காட்டி அணியின் ரன் ரேட்டை வேகமாக உயர்த்தினர். இருந்தாலும் முடிவில் பெங்களூரு அணி 20 ஒவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 218 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் 8 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணி திரில்லான வெற்றி பெற்றது. 

மேலும் ஐபிஎல் போட்டியில் இன்றைய ஆட்டத்தில் சன் ரைசா்ஸ் ஹைதராபாத் அணியும், மும்பை அணியும் மோதுகின்றன. இதில் வெற்றி யாா் பக்கம் என்பதை அறிய ரசிகா்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனா்.