“வாங்கண்ணா.. வணக்கங்கண்ணா..“ - ஆல்ரவுண்டர் மொயின் அலியை உற்சாகமாக வரவேற்ற சென்னை அணி!

வாங்கண்ணா.. வணக்கங்கண்ணா என்று இங்கிலாந்து ஆல்ரவுண்டர் மொயின் அலியை சென்னை அணி உற்சாகமாக வரவேற்றுள்ளது.  

“வாங்கண்ணா.. வணக்கங்கண்ணா..“ - ஆல்ரவுண்டர்  மொயின் அலியை உற்சாகமாக வரவேற்ற சென்னை அணி!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அடுத்தடுத்த முக்கியமான வீரர்கள் தொடக்க போட்டியில் விளையாடுவது கேள்விக் குறியாகியதால் ரசிகர்கள் பெருத்த ஏமாற்றம் அடைந்து வந்தனர்.

அந்த வகையில் சென்னை அணியின் நம்பிக்கை வீரர்களில் ஒருவரான மொயின் அலிக்கு விசா கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டது. இதனால், ஐபில் தொடரில் கொல்கத்தா அணிக்கு எதிரான முதல் போட்டியில் அவர் பங்கேற்கவில்லை.

அதன்பின்  ஒருவழியாக விசா கிடைத்து இந்தியா வந்த மொயின் அலி, தற்போது சென்னை அணியுடன் இணைந்துள்ளார். அவரை, முன்னாள் கேப்டன் தோனி உள்ளிட்ட வீரர்கள் கை கொடுத்து வரவேற்றனர்.