ஹரியானாவில் நடைபெற்ற சிலம்ப போட்டி...... சென்னை வீராங்கனைகள்  தங்கம்,வெள்ளி,வெண்கலம்...! ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப்பை கைபற்றி.... சென்னைக்கு பெருமை :

ஹரியானாவில் நடைபெற்ற சிலம்ப போட்டி...... சென்னை வீராங்கனைகள்  தங்கம்,வெள்ளி,வெண்கலம்...!  ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப்பை கைபற்றி.... சென்னைக்கு பெருமை :

ஹரியானாவில் நடைபெற்ற சிலம்ப போட்டியில் சென்னையை சேர்ந்த வீராங்கனைகள்  தங்கம்,வெள்ளி,வெண்கலம்  வென்று சாதனை படைத்துள்ளனர். மேலும், சிலம்பபோட்டியை பள்ளி கல்லூரிகளில் விளையாட்டு போட்டியாக வைக்க வேண்டும் எனவும், வேலைவாய்ப்பிலும் சிலம்பத்தை சேர்க்க வேண்டும் எனவும்  அரசுக்கு கோரிக்கை எழுப்பினர்.

ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப்பை கைபற்றி...... சென்னைக்கு பெருமை :

இளைஞர் விளையாட்டு சங்கங்கள் நடத்தும்  யூத் கேம்ஸ் ப்ரோ லீக் -2023 ஹரியானாவில்  கடந்த 15 & 16 தேதி மற்றும் 18 தேதி ஆகிய மூன்று நாட்களுக்கு  நடைப்பெற்றது. இதில் பல்வேறு போட்டிகள் அறிவிக்கப்பட்டு, அப்போட்டிகளில்,  பல்வேறு மாநிலங்களில் இருந்து சுமார் 370 மாணவர்கள் பங்கேற்றனர். குறிப்பாக, சிலம்பத்தில் 100 மாணவர்கள் கலந்து கொண்டனர். இதில் சென்னையில் இருந்து 18 மாணவர்கள் சிலம்பம் போட்டியில் கலந்து கொண்டனர். அவர்களில் 15 பேர் தங்கப் பதக்கங்கள், 2 வெள்ளி, 1 வெண்கலப் பதக்கம் என மொத்தம் 18 பதக்கங்களையும்  பெற்று ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப்பை கைபற்றி சென்னைக்கு பெருமை சேர்த்து இருக்கிறார்கள்.

இந்நிலையில், வெற்றிபெற்றவர்களை வாழ்த்திய சிலம்ப பயிற்சியாளர் விவேதா கூறுகையில், ஹரியானவில் நடைப்பெற்ற போட்டியில் கலந்து கொண்டு 18 பதக்கங்களை பெற்றது மகிழ்ச்சியாக இருப்பதாக கூறினார்.  மேலும், போட்டியில் கலந்து கொள்வதற்கு வாய்பளித்த இளைஞர் விளையாட்டுக் கூட்டமைப்பு நிறுவனர் உமேஷ் மற்றும், அனைத்து விளையாட்டு தெற்கு செயலாளர் கோடீஸ்வரன் மற்றும்  இந்திய சிலம்பம் அமைப்பின் செயலாளர் விஜயன் ஆகியோருக்கு நன்றியையும்  தெரிவித்தார்.

சிலம்பபோட்டியை பள்ளி கல்லூரிகளில் விளையாட்டு போட்டியாக வைக்க வேண்டும்.....

மேலும் அவர் கூறுகையில், கடந்த இரண்டு வருடமாக மாணவர்களுக்கு சிலம்பம் கற்று தருவதாகவும், இதுவரை மூன்று முறை தேசிய அளவில் சிலம்போட்டியில் கலந்து கொண்டு இருப்பதாகவும் தெரிவித்தார். தொடர்ந்து அடுத்த மாதம் சர்வதேச அளவில் கலந்து கொள்ள இருப்பதாகவும் தெரிவித்தார். தொடர்ந்து, சிலம்பபோட்டியை பள்ளி கல்லூரிகளில் விளையாட்டு போட்டியாக வைக்க வேண்டும் எனவும், வேலைவாய்ப்பிலும் சிலம்பத்தை சேர்க்க வேண்டும் எனவும்  அரசுக்கு கோரிக்கை வைத்தார்.

இதையும் படிக்க }இந்திய மாற்றுத் திறனாளி கிரிக்கெட் வீரரை...பேருந்தில் ஏற்றாமல் மிரட்டல் விடுத்த நடத்துனர்!வைரலான வீடியோ!!

ஹரியானாவில் இருந்து ரயில் மூலம் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு வந்தடைந்த வீராங்கனைகளுக்கு பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் வாழ்த்துகளை தெரிவித்தனர்.

இதையும் படிக்க }இந்தியாவிலேயே முதல் முறையாக தமிழ்நாட்டில் சர்வதேச சர்ஃபிங் போட்டி...!!