"உலக கோப்பை கிரிக்கெட் போட்டி" பட்டியல் வெளியீடு! 

"உலக கோப்பை கிரிக்கெட் போட்டி" பட்டியல் வெளியீடு! 

2023ஆம் ஆண்டுக்கான உலக கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெறும் இடங்கள் மற்றும் விளையாடும் அணிகளின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும்  உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இந்த ஆண்டு இந்தியாவில் நடத்தப்பட உள்ளது. இதற்கான பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் வெளியிட்டுள்ளது. இப்பட்டியலில் போட்டி நடைபெறும் மைதானங்கள் பங்கேற்று விளையாடும் அணிகள் ஆட்டம் நடைபெறும் நாட்கள் உள்ளிட்ட தகவல்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. இதில் அரையிறுதி மற்றும் இறுதி ஆட்டம் தவிர்த்து மொத்தம் 9 ஆட்டங்களில் இந்திய அணி பங்கேற்க உள்ளது.

இதில் அக்டோபர் 8ம் தேதி சென்னையில் நடக்க இருக்கும் போட்டியில் ஆஸ்திரேலிய அணியுடன் மோதும் இந்திய அணி பின்னர் 1ஆம் தேதி ஆப்கானிஸ்தானுடன் டெல்லியில் நடைபெறும்  ஆட்டத்தில் மோதுகிறது. தொடர்ந்து பாகிஸ்தான், பங்களாதேஷ், நியூசிலாந்து, இங்கிலாந்து, தென் ஆப்ரிக்கா ஆகிய அணிகளுடன் மோதும் இந்திய அணி மொத்தம் 11 ஆட்டங்களில் பங்கேற்கிறது. இவற்றில் வெற்றிப்பெறும் பட்சத்தில் அரையிறுதியில் தகுதி பெறும் அணியுடன் மோதும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்பட்டியல் வெளியீடானது இப்போதே கிரிக்கெட் ரசிகர்களின் ஆர்வத்தை தூண்டியுள்ளது.