"சிஎஸ்கே-வுக்கு டபுள் சர்பிரைஸ்... கொல்கத்தா அணியின் 2 தூண்கள் விலகல்.. சிக்கலில் சிக்கிய ஸ்ரேயாஸ்!!

சிஎஸ்கே-வுக்கு டபுள் சர்பிரைஸ் கிடைத்துள்ளது.

"சிஎஸ்கே-வுக்கு டபுள் சர்பிரைஸ்... கொல்கத்தா அணியின் 2 தூண்கள் விலகல்.. சிக்கலில் சிக்கிய ஸ்ரேயாஸ்!!

ஐபிஎல் 15-வது சீசன் வரும் 26ஆம் தேதி தொடங்க உள்ள நிலையில், முதல் போட்டி சிஎஸ்கே-வுக்கும்... கொல்கத்தா அணிக்கும் மும்பை வான்கடேவில் வைத்து நடக்கிறது. இந்த போட்டிக்கான ப்ளேயிங் 11 முடிவுகள் தற்போது இருந்தே எடுக்கப்பட்டு வருகின்றன.

சிஎஸ்கே அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் தீபக் சாஹர் காயம் காரணமாக விளையாடமாட்டார். அவருக்கு மாற்றாகக் கருதப்பட்ட டுவைன் பிரிட்டோரிய்ஸ் வர தாமதமாகிவிடும். அது ஒரு புறம் இருந்தாலும்.. சிஎஸ்கே அணியின் முக்கிய வீரரான மொய்ன் அலியும் விசா பிரச்சனை காரணமாக வரவில்லை. இதனால் கொல்கத்தா அணியை எப்படி சமாளிக்க போகிறது "நம்ம சிஎஸ்கே அணி" என்று ரசிகர்கள் புலம்பி வந்தனர்.

ரசிகர்களின் வருத்தத்திற்கு ஏற்ப "நான் அடிச்ச மணி யாருக்கு கேட்டுச்சோ இல்லையோ அந்த கடவுளுக்கு கேட்டிடுச்சி".. கொடுத்தான் பாரு சிஎஸ்கே-வுக்கு டபுள் சர்பிரைஸ்ஸ..

அந்த சர்பிரைஸ் என்ன வென்றால், கொல்கத்தா அணியின் முன்னணி பவுலரான பேட் கம்மின்ஸ் மற்றும் தொடக்க வீரர் ஆரோன் ஃபின்ச் ஆகியோர் பங்கேற்க போவதில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. கொல்கத்தா அணியின் முதல் 5 போட்டிகளில் விளையாட மாட்டார்கள் என அணியின் ஆலோசகர் டேவிட் ஹஸி தெரிவித்துள்ளார்.

இவர்கள் இரண்டு பேருமே அணியின் முக்கிய வீரர்கள்.. பேட் கம்மின்ஸ் இருந்தால் சிஎஸ்கேவின் டாப் ஆர்டருக்கு அச்சுறுத்தலாக இருக்கும்.. இது ஒருபுறம் இருக்க, ஃபின்ச் இல்லாவிட்டால் கொல்கத்தாவின் டாப் ஆர்டர் பலவீனமாக இருக்கும். இது சிஎஸ்கே-வுக்கு சாதகமாக இருக்கலாம்.

ஆஸ்திரேலிய அணி தற்போது பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இந்தத் தொடர் ஏப்ரல் 5ஆம் தேதி முடிவடைகிறது. இதை தொடர்ந்து.. குவாரண்டைன் காலம் முடிந்த பிறகு தான் கம்மின்ஸ் மற்றும் ஃபின்ச் கொல்கத்தா அணியில் சேர உள்ளனர். அதற்குள் அந்த அணி 5 லீக் ஆட்டங்கள் விளையாடிவிடும்..