யூரோ கோப்பை கால்பந்து தொடர்: இங்கிலாந்து மற்றும் உக்ரைன் அணிகள் காலிறுதிக்கு தகுதி...

யூரோ கோப்பை கால்பந்து தொடரில் இங்கிலாந்து மற்றும் உக்ரைன் அணிகள் காலிறுதிக்கு தகுதி பெற்றுள்ளன.

யூரோ கோப்பை கால்பந்து தொடர்: இங்கிலாந்து மற்றும் உக்ரைன் அணிகள் காலிறுதிக்கு தகுதி...

16-வது ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப் தொடரில் லீக் போட்டிகள் நிறைவடைந்து விட்டன. இதனையடுத்து, இங்கிலாந்தின் வெம்ப்லியில் நடைபெற்ற நாக் அவுட் சுற்றில் இங்கிலாந்து மற்றும் ஜெர்மனி அணிகள் பலப்பரீட்சை நடத்தின. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த கால்பந்து ஆட்டத்தின் இறுதியில், இங்கிலாந்து அணி 2 க்கு 0 என்ற கோல் கணக்கில் ஜெர்மனி அணியை வீழ்த்தி காலிறுதிக்கு தகுதி பெற்றது.

இதைப்போல ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோவில் நடைபெற்ற நாக் அவுட் சுற்றில் ஸ்வீடன் மற்றும் உக்ரைன் அணிகள் மோதின. விறுவிறுப்பாக நடைபெற்ற ஆட்டத்தின் இறுதியில் உக்ரைன் அணி 2 க்கு 1 என்ற கோல் கணக்கில் ஸ்வீடன் அணியை வீழ்த்தி  காலிறுதிக்கு தகுதி பெற்றது