ஒலிம்பிக் தடகளப் போட்டியில் பங்கேற்கும் 17 இந்திய வீரர்களில்  ஐந்து பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள்...

ஒலிம்பிக் தடகளப் போட்டியில் இந்தியாவில் இருந்து பங்கேற்கும் 17 வீரர்களில் தமிழகத்தை சேர்ந்த  ஐந்து பேர் இடம்பெற்றுள்ளனர்

ஒலிம்பிக் தடகளப் போட்டியில் பங்கேற்கும் 17 இந்திய வீரர்களில்  ஐந்து பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள்...

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெறும் ஒலிம்பிக்கின் தடகளப் போட்டியில் பங்கேற்கவுள்ள 26 இந்திய வீரர், வீராங்கனைகளின் பெயரை இந்திய தடகள சம்மேளனம் அதிகாரப் பூர்வமாக அறிவித்தது. இதில் தமிழகத்தை சேர்ந்த 3 வீராங்கனைகள் மற்றும் 2 வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். ஆயிரத்து 600 மீட்டர் தொடர் ஓட்டம் நான்கு பேர் கொண்ட ஆடவர் அணியில், தமிழகத்தை சேர்ந்த ஆரோக்கிய ராஜிவ், நாகநாதன் பாண்டி ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இதேபோல் ஆயிரத்து 600 மீட்டர் கலப்பு தொடர் ஓட்டத்திற்கான அணியில் தமிழகத்தை சேர்ந்த தனலட்சுமி, ரேவதி வீரமணி, சுதா வெங்கடேசன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். 

இவர்களில் திருச்சி மாவட்டம் லால்குடியைச் சேர்ந்த ஆரோக்கிய ராஜிவ், ராணுவத்தில் பணியாற்றி வருகிறார். மற்றொரு தடகளவீரரான நாகநாதன் பாண்டி ராமநாதபுரம் மாவட்டம் சிங்கப்புலியாப்பட்டியை சேர்ந்தவர். சென்னை ஆயுதப்படை தனிக்காவலராக பணியாற்றி வரும் இவர், பஞ்சாப் மாநிலத்தில் நடைபெற்று வரும் தேசிய தடகளப் போட்டியில் இரண்டாவது இடம்பிடித்து ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றார்.

இதேபோல் திருச்சி மாவட்டம்  கூடுரைச் சேர்ந்த தனலட்சுமி மற்றும் திருவெறும்பூரைச் சேர்ந்த சுபா வெங்கடேஷ் ஆகியோரும் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர். இவர்களின் சுபா வெங்கடேஷ், இதுவரை 8 சர்வதேச போட்டிகளில் கலந்து கொண்டு 3 போட்டிகளில் பதக்கம் வென்றுள்ளார்.. இந்நிலையில் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கவுள்ள வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் 5 பேருக்கும் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் 5 லட்சம் ரூபாயை ஊக்கத் தொகையாக அறிவித்துள்ளார்