ஒலிம்பிக்கில் இருந்து விலகினார் ஹீமா தாஸ்... 

காயம் காரணமாக ஒலிம்பிக்கில் இருந்து ஹீமா தாஸ் விலகல்!

ஒலிம்பிக்கில் இருந்து விலகினார் ஹீமா தாஸ்... 
காயம் காரணமாக டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் இருந்து தடகள வீராங்கனை ஹீமா தாஸ் விலகியுள்ளார். இதுகுறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், தவறான நேரத்தில் தனக்கு ஏற்பட்ட காயத்தினால் தனது முதல் ஒலிம்பிக்கை தவற விடுவதாகவும், நிச்சயம் இதிலிருந்து மீண்டு வருவேன் எனவும் தெரிவித்துள்ளார்.  
 
தனது பயிற்சியாளர்கள், சக வீரர்கள் என அனைவரது ஆதரவுக்கும் நன்றி தெரிவித்து கொண்டுள்ள ஹீமாதாஸ், 2022இல் நடைபெற உள்ள காமன்வெல்த், ஆசிய விளையாட்டு போட்டிகள் மற்றும் உலக சாம்பியன்ஷிப் தொடர்களில் வலுவாக திரும்பி வருவேன் என பதிவிட்டுள்ளார்.