இந்திய vs பாகிஸ்தான்.. இந்திய அணி திகில் வெற்றி..!

இந்திய vs பாகிஸ்தான்..  இந்திய அணி திகில் வெற்றி..!

டி20 உலகக் கோப்பை போட்டியில் இந்தியா பாகிஸ்தானை நான்கு விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி திகில் வெற்றி பெற்றது.

மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற சூப்பர் 12 ஆட்டத்தில் ரோஹித் ஷர்மா தலைமையிலான இந்தியா, பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணி எதிர்கொண்டது. டாஸ் வென்ற இந்தியா அணி பௌலிங் தேர்வு செய்தது. களமிறங்கிய பாகிஸ்தான் அணி 159 ரன்கள் எடுத்தது.

பின்னர் பேட்டிகிங்கில் களமிறங்கிய இந்திய அணி..  அனல் பறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி.. அதுவும் விராட் கோலியின் அபார ஆட்டத்தினால் இந்திய அணி 160 ரன்கள்.. 6 விக்கெட் இழந்து வெற்றி வாகை சூடியது.