சாதித்த ஹாக்கி அணி! 41 ஆண்டுகளுக்கு பிறகு ஒலிம்பிக்கில் பதக்கத்தை முத்தமிட்டு மகிழ்ச்சி!

டோக்கியோ ஒலிம்பிக் தொடரில் இந்திய ஆடவர் ஹாக்கி அணி ஜெர்மனியை வீழ்த்தி இந்தியா மேலும் ஒரு வெண்கலப் பதக்கம் பெற்றது.

சாதித்த ஹாக்கி அணி!  41 ஆண்டுகளுக்கு பிறகு ஒலிம்பிக்கில் பதக்கத்தை முத்தமிட்டு மகிழ்ச்சி!

டோக்கியோ ஒலிம்பிக் தொடரில் இந்திய ஆடவர் ஹாக்கி அணி ஜெர்மனியை வீழ்த்தி இந்தியா மேலும் ஒரு வெண்கலப் பதக்கம் பெற்றது.

டோக்கியோ ஒலிம்பிக் திருவிழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது.  ஆண்களுக்கான ஹாக்கி போட்டியில் வெண்கல பதக்கத்திற்கான போட்டி இன்று காலை நடைபெற்றது. இதில் இந்திய அணி ஜெர்மனியுடன் பலபரிட்சை நடத்தியது.விறுவிறுப்பாக நடந்த ஆட்டதொடரில் 2-வது நிமிடத்திலேயே ஜெர்மனி அணி கோல் அடித்து ஒன்றுக்கு பூஜ்ஜியம் என்ற கோல் கணக்கில் முன்னிலை வகித்தனர்.இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக 2-வது கால் பகுதி ஆட்டத்தில் இந்தியா கோல் அடித்து ஒன்றுக்கு ஒன்றுக்கு என முன்னிலைப் பெற்றது.

அடுத்தடுத்த கால் பகுதி ஆட்டத்தில் ஜெர்மனி வீரர்கள் கோல் அடிக்க முயற்சி செய்ய, இந்திய வீரர்கள் தடுப்பதில் ஆர்வம் காட்டி வந்தனர். ஆட்ட இறுதியில் ஜெர்மனிக்கு பெனால்டி கார்னர் வாய்ப்பு கிடைத்ததும், அதை இந்திய வீரர்களின் அனல் பறக்கும் விளையாட்டு திறத்தால் முறியடித்து 5-க்கு 4 என்ற கோல் கணக்கில் இந்தியா வெற்றி பெற்றது.

வெண்கல பதக்கத்திற்கான போட்டியில் மிகவும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய ஆண்கள் ஹாக்கி அணி இறுதியில் ஜெர்மனியை வீழ்த்தி பதக்கம் வென்றது. இதன் மூலம் 41 ஆண்டுகளுக்கு பிறகு ஒலிம்பிக்கில் இந்திய ஆடவர் ஹாக்கி அணி வெண்கலப் பதக்கத்தை வென்றது குறிப்பிடத்தக்கது.