இந்திய வீரர் சுனில் சேத்ரியின் சாதனையை முறியடித்தார் லயனல் மெஸ்ஸி...

இந்திய கால்பந்து வீரரான சுனில் சேத்ரியின் சாதனையை நட்சத்திர வீரர் மெஸ்ஸி முறியடித்துள்ளார்.

இந்திய வீரர் சுனில் சேத்ரியின் சாதனையை முறியடித்தார் லயனல் மெஸ்ஸி...

கோபா அமெரிக்கா கால்பந்து போட்டியில் பொலிவியா அணிக்கு எதிராக 2 கோல்கள் அடித்த அர்ஜென்டினாவின் முன்கள வீரர் மெஸ்ஸி இந்திய கால்பந்து வீரரான சுனில் சேத்ரியின் சாதனையை முறியடித்துள்ளார். பிரேசில் நாட்டில் நடைபெற்று வரும்  கோபா அமெரிக்கா கால்பந்து போட்டியின் 4 ஆட்டங்களில் மெஸ்ஸி 3 கோல்கள் அடித்துள்ளார். இன்று அடித்த 2 கோல்கள் மூலம் மெஸ்ஸி சர்வதேச அளவில் 75 கோல்களை எட்டியுள்ளார். முன்னதாக இந்திய வீரர் சுனில் சேத்ரி 74 கோல்கள் அடித்து இருந்தது சாதனையாக இருந்தது . இதனை மெஸ்ஸி முறியடித்து முன்னேறியுள்ளார்.