இலங்கை அணியை வீழ்த்திய நமீபிய அணி...

இருபது ஓவர் உலக கோப்பை போட்டி தொடரின் தகுந்த சுற்று ஆட்டத்தின் முதல் போட்டியில் இலங்கை அணியை நமீபியா அணி வீழ்த்தி அதிர்ச்சி அளித்தது.

இலங்கை அணியை வீழ்த்திய நமீபிய அணி...

8வது டி20 உலக கோப்பை தொடர் ஆஸ்திரேலியாவில் இன்று தொடங்கியது. முதல் சுற்றின் முதலாவது ஆட்டத்தில் இலங்கை, நமீபியா அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்து  வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் களம் இறங்கிய  நமீபியா 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 163 ரன்கள் எடுத்திருந்தது.

அந்த அணியில் அதிகபட்சமாக  பிரைலின்க் 28 பந்துகளில் 44 ரன்னும், ஜே.ஜே.ஸ்மித் அவுட் ஆகாமல் 16 பந்துகளில் 31 ரன்னும் எடுத்தனர். இதையடுத்து 164 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களம் இறங்கிய இலங்கை அணி, நமீபியா அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் திணறியது. அந்த அணியின் தொடக்க வீரர் நிசங்கா 9 ரன்னுக்கும், மெண்டீஸ் 6 ரன்னுக்கும் ஆட்டமிழந்தனர். தனஞ்செயா டிசெல்வா 12 ரன்னுக்கு ஆட்டமிழந்தார். 

மேலும் படிக்க | இன்று பலபரீட்சை நடத்தும் இந்தியா-இலங்கை.. கோப்பை வெல்லப்போகும் அணி எது?

அதிகபட்சமாக கேப்டன் தசுன் ஷனகா 29 ரன்னும், பானுகா ராஜபக்சே 20 ரன்னும் அடித்தனர். மற்ற வீரர்கள் சொற்ப ரன்னுடன் பெவிலியன் திரும்பினர்.இறுதியில் இலங்கை அணி 19 ஓவர் முடிவில் 108 ரன்னுக்கு ஆட்டமிழந்தது. 

இதன் மூலம் 55 ரன்கள் வித்தியாசத்தில் நமீபியா அபார வெற்றி பெற்று இலங்கை அணிக்கு அதிர்ச்சி அளித்தது. நமீபியா அணி தரப்பில் டேவிட் வைஸ், பெர்னார்ட் ஸ்கோல்ட்ஸ்,பென் ஷிகோங்கோ,ஜான் ப்ரைலின்க் ஆகியோர் தலா 2 விக்கெட்களை வீழ்த்தினர். ஸ்மித் ஒரு விக்கெட் எடுத்தார்.

மேலும் படிக்க | நாளை முதல் சூடு பறக்கப் போகும் டி20 உலகக் கோப்பை.. கோப்பையோடு 16 அணிகளின் கேப்டன்கள்..!