2022-ஆம் ஆண்டிற்கான தேசிய விளையாட்டு விருதுகள் அறிவிப்புகள்...தமிழகத்தில் யார் யாருக்கு தெரியுமா?

2022-ஆம் ஆண்டிற்கான தேசிய விளையாட்டு விருதுகள் அறிவிப்புகள்...தமிழகத்தில் யார் யாருக்கு தெரியுமா?

செஸ் வீரர் பிரக்யானந்தா மற்றும் துப்பாக்கி சுடுதல் வீராங்கனை இளவேனில் வாலறிவனுக்கு அர்ஜூனா விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய விளையாட்டு விருதுகள் அறிவிப்பு:

மத்திய இளைஞர் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சகம், விளையாட்டுத் துறையில் சிறந்த வீரர்களுக்கான தேசிய விருதுகளை இன்று அறிவித்துள்ளது. கடந்த நான்கு ஆண்டுகளில் விளையாட்டுத் துறையில் சிறந்து விளங்கிய விளையாட்டு வீரருக்கு “மேஜர் தயான் சந்த் கேல்ரத்னா விருது”, சிறந்த செயல் திறனுக்கான “அர்ஜுனா விருது”, சிறந்த பயிற்சியாளர்களுக்கான “துரோணாச்சார்யா விருது”, வாழ்நாள் சாதனைக்கான “தயான் சந்த் விருது” ஆகியவை அறிவிக்கப்பட்டு உள்ளது. 

இதையும் படிக்க: மனைவியை கொன்று விட்டு... நீலிக்கண்ணீர் வடித்த கணவன்...கொடுத்த வாக்குமூலம் என்ன?

அந்தவகையில், 2022 ஆம் ஆண்டுக்கான தேசிய விளையாட்டு விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதில், நாட்டின் மிக உயரிய விளையாட்டு விருதான “மேஜர் தயான் சந்த் கேல் ரத்னா விருது” பிரபல டேபிள் டென்னிஸ் வீரர் சரத் கமல் அசாந்தாவுக்கு வழங்கப்பட்டுள்ளது.

அதேபோல், தமிழகத்தை சேர்ந்த செஸ் வீரர் பிரக்யானந்தா மற்றும் துப்பாக்கி சுடுதல் வீராங்கனை இளவேனில் வாலறிவனுக்கு அர்ஜூனா விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விருதுகளை வரும் 30 ஆம் தேதி குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு வழங்க இருப்பதாக மத்திய விளையாட்டு துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.