ஒலிம்பிக் ஹாக்கி - கடைசி லீக் ஆட்டத்தில் இந்திய ஆடவர் அணி வெற்றி  

ஒலிம்பிக் ஹாக்கி - கடைசி லீக் ஆட்டத்தில் இந்திய ஆடவர் அணி வெற்றி   

டோக்கியோ ஒலிம்பிக் ஹாக்கி போட்டியில், ஜப்பானுக்கு எதிரான லீக் ஆட்டத்தில் இந்திய ஆடவர் அணி வெற்றி பெற்றுள்ளது.

டோக்கியோ ஒலிம்பிக் ஹாக்கி போட்டியில் ஏ பிரிவில் இடம் பெற்றுள்ள இந்திய ஆடவர் அணி, தமக்கு எதிரான 5-வது லீக் ஆட்டத்தில் ஜப்பான் அணியிடம் பலப்பரீட்சை நடத்தியது. ஆட்டம் தொடங்கியதில் இருந்து இந்திய வீரர்கள் ஆக்ரோசமாக விளையாட, இந்திய அணி தொடர்ந்து முன்னிலை வகித்து வந்தது.

இறுதியில் 5 க்கு 3 என்ற கோல் கணக்கில் இந்திய அணி வெற்றி பெற்றது. ஏற்கனவே காலிறுதி ஆட்டத்திற்கு இந்திய ஆடவர் அணி தகுதி பெற்றிருந்த நிலையிலும், கடைசி லீக் ஆட்டத்தில் ஜப்பானை வீழ்த்தியுள்ளது.