ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி

பஞ்சாப் அணிக்கு எதிரான ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றுள்ளது.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி

பஞ்சாப் அணிக்கு எதிரான ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றுள்ளது.

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும்  ஐ.பி.எல். தொடரின் இரண்டாம் கட்ட பிரிவின் நேற்றைய போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ்  அணியும் பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதின. பஞ்சாப் அணியின் அதிரடி ஆட்டக்காரர் கிறிஸ் கெயிலுக்கு பிறந்தநாளான இன்று விளையாடும் லெவனில் இடம் கிடைக்கவில்லை. டாஸ் வென்ற பஞ்சாப் அணி, ராஜஸ்தான் அணியை  முதலில் பேட்டிங் செய்யுமாறு அழைத்தது. முதலில் பேட்டிங்கை துவக்கிய ராஜஸ்தான் அணி துவக்கம் முதலே அதிரடி காட்டியது.  தொடக்க ஆட்டக்காரர்களாக ஜெய்ஸ்வால் மற்றும் லீவிஸ் ஆகிய இருவரும் நாலாபுறமும் பந்துகளை சிதறடித்தனர். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜெய்ஸ்வால், 49 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். மஹிபால் லோம்ரோர் அதிரடியாக ஆடி 17 பந்துகளில் 43 ரன்கள் குவித்தார்.  ஆட்டத்தின் கடைசி ஓவர்களில் சிறப்பாக பந்துவீசிய பஞ்சாப்  அணியால்  ராஜஸ்தான் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 185 ரன்கள் எடுத்தது. பஞ்சாப்  அணி தரப்பில் சிறப்பாக பந்து வீசிய  அர்ஷ்தீப் சிங்   5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 

186 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பஞ்சாப்  அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்கள் கேஎல் ராகுல், மயங்க் அகர்வால் பொறுப்புடன் ஆடினர். அகர்வால் அதிரடியாக ஆடி அரை சதம் கடந்தார்.  பஞ்சாப் அணியின் எண்ணிக்கை 120 ஆக இருந்தபோது கே.எல்.ராகுல் 49 ரன்னில் அவுட்டானார். அவரை தொடர்ந்து சிறிது நேரத்தில் மயங்க் அகர்வால் 67 ரன்னில் வீழ்ந்தார். அடுத்து இறங்கிய மார்கிராம், நிகோலஸ் பூரன் இணைந்து பொறுப்புடன் ஆடினர். பூரன் 32 ரன்னில் ஆட்டமிழந்தார்.  இறுதியில், பஞ்சாப் 20 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 184 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது. இதன்மூலம் கடைசி ஓவரில் 2 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் த்ரில் வெற்றி பெற்றது.