அழுத ரொனால்டோ...ஆறுதல் கூறிய கோலி...

அழுத ரொனால்டோ...ஆறுதல் கூறிய கோலி...

ஃபிஃபா உலகக் கோப்பையில் இருந்து போர்ச்சுகல் வெளியேறிய பிறகு, நாட்டிற்காக எப்போதும் போராடுவேன் என்று எழுதியுள்ளார் ரொனால்டோ.  ஒவ்வொரு வீரருக்கும் ரொனால்டோ ஒரு உத்வேகம் என்று கூறியுள்ளார் விராட் கோலி.

கலைந்த கனவு:

ஃபிஃபா உலகக் கோப்பை 2022ல் இருந்து ரொனால்டோவின் போர்ச்சுகல் அணி வெளியேறியது.  இதன் மூலம் ரொனால்டோவின் உலக சாம்பியன் கனவு மீண்டும் தகர்க்கப்பட்டுள்ளது.  போர்ச்சுகலுக்கு ஐந்து உலகக் கோப்பைகளை வென்ற ரொனால்டோ, இன்னும் நாட்டிற்காக FIFA உலகக் கோப்பையை ஒருமுறை கூட வெல்லவில்லை.  இப்போது அவரது கனவு நிறைவேறாமல் இருப்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது.  

மேலும் தெரிந்துகொள்க:    ”கனவு கலையும் வரை....” மீண்டும் விளையாடுவாரா ரொனால்டோ? வருத்தத்தில் ரசிகர்கள்!!!

37 வயதான ரொனால்டோ அடுத்த உலகக் கோப்பையில் விளையாடுவது மிகவும் கடினம். இத்தகைய சூழ்நிலையில், ஃபிஃபா உலக சாம்பியன் ஆகும் கனவை அவரால் ஒருபோதும் நிறைவேற்ற முடியாது.  உலகக் கோப்பையில் இருந்து போர்ச்சுகல் வெளியேறிய பிறகு, ரொனால்டோ நாட்டிற்காக எப்போதும் போராடியதாகவும், எதிர்காலத்திலும் தனது அணுகுமுறை அப்படியே இருக்கும் என்றும் கூறியுள்ளார். 

விராட் கூறியது என்ன?:

ரொனால்டோவின் புகைப்படத்தைப் பகிர்ந்த விராட் கோலி, "இந்த விளையாட்டுக்காகவும் உலகெங்கிலும் உள்ள அதன் ஆதரவாளர்களுக்காகவும் நீங்கள் செய்ததை ஒருபோதும் மறக்க முடியாது. எந்தக் கோப்பையையும் அல்லது எந்த பட்டமும் உங்களிடமிருந்து பறிக்க முடியாதது.  என்னிடமும் என்னைப் போன்ற பல ரசிகர்களிடமும் நீங்கள் ஏற்படுத்திய தாக்கம் எந்தத் வகையிலும் விவரிக்க முடியாதது.  நீங்கள் விளையாடுவதைப் பார்ப்பது கடவுள் கொடுத்த வரம்.  

எப்பொழுதும் தன் முழு உழைப்பையும் அர்ப்பணிப்பையும் கொடுக்கும் மனிதனுக்கு, கடவுளின் ஆசீர்வாதம் எப்போதும் உடனிருக்கும்.  நீங்கள் ஒவ்வொரு விளையாட்டு வீரருக்கும் உண்மையான உத்வேகமாக இருக்கிறீர்கள்.” எனப் பதிவிட்டுள்ளார்.

-நப்பசலையார்

இதையும் படிக்க:    இது என்ன துர்கா ஸ்டாலினுக்கு வந்த சோதனை...குடை பிடித்தது ஒரு குத்தமா?!!