ஷமி பாய்.. ஷமி பாய் "பீஸ்ட் அப்டேட்".. அலறிய விஜய் ரசிகர்கள்.. பெங்களூரு டெஸ்டில் சுவாரசியம்!!

ஷமி பாய்.. ஷமி பாய் "பீஸ்ட் அப்டேட்".. அலறிய விஜய் ரசிகர்கள்.. பெங்களூரு டெஸ்டில் சுவாரசியம்!!

இந்திய - இலங்கை மோதி கொள்ளும் இரண்டாவது டெஸ்ட் போட்டி நேற்று பெங்களுருவில் நடைபெற்றது. இந்தியா முதல் இன்னிங்சில் 252 ரன்கள் எடுத்த நிலையில், இலங்கை 109 ரன்கள் எடுத்தது. 143 ரன்கள் முன்னிலையுடன் இந்திய அணி தனது 2வது இன்னிங்சில் விளையாடி வருகிறது.

இந்நிலையில், நேற்றைய ஆட்டத்தின் போது பவுண்டரி லைனில் நின்று கொண்டிருந்த இந்திய வீரர் முகமது ஷமியிடம் விஜய் ரசிகர்கள் சிலர், ஷமி பாய்.. ஷமி பாய் "பீஸ்ட் அப்டேட் என முகமது ஷமியிடம் கேட்டனர். ஆனால், அதற்கு ஷமி எந்த பதிலும் சொல்ல வில்லை.

இதற்கு முன்பு அஜித் ரசிர்கள், கிரிக்கெட் போட்டிகள் இடையே வீரர்களிடம் "வலிமை" அப்டேட் குறித்து கேட்டு வந்தனர். தற்போது, அதேயே விஜய் ரசிகர்களும் Follow செய்து வருகின்றனர்.

நெல்சன் அனிருத் கூட்டணியில் விஜய் நடித்துள்ள 'பீஸ்ட்' படம் ஏப்ரல் மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் படத்தின் டீசர், பாடல் வெளியீட்டு விழா இன்னும் அறிவிக்கப்படவில்லை. இதனால், கிரிக்கெட் வீரர்களிடம் 'பீஸ்ட்' அப்டேட் குறித்து விஜய் ரசிகர்கள் கேட்க ஆரம்பித்துள்ளனர்.