முதல்ல ஆஸ்திரேலியாவ அடிசோம், இப்போ நியூசிலாந்த அடிக்குறோம்: கெத்து காட்டும் வங்கதேச அணி...

நியூசிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் வெற்றிபெற்று தொடரில் வங்கதேச அணி முன்னிலை பெற்றுள்ளது.

முதல்ல ஆஸ்திரேலியாவ அடிசோம், இப்போ நியூசிலாந்த அடிக்குறோம்: கெத்து காட்டும் வங்கதேச அணி...

வங்கதேசத்துக்குச் சுற்றுப்பயணம் செய்துள்ள நியூசிலாந்து அணி 5 டி20 ஆட்டங்களில் விளையாடி வருகிறது. இதில் முதல் போட்டியில் 60 ரன்களுக்குள் சுருட்டி முதல் டி20 ஆட்டத்தில் அபாரமாக வெற்றி பெற்றது. இதன்மூலம் டி20 கிரிக்கெட்டில் நியூசிலாந்துக்கு எதிராக முதல் வெற்றியை அடைந்தது.

 இதனையடுத்து 2-வது டி20 போட்டி  டாக்காவில் நடைபெற்றது. இதில்  முதலில் விளையாடிய வங்கதேச அணி, 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 141 ரன்கள் எடுத்தது. கேப்டன் மஹ்முதுல்லா 37 ரன்களும் தொடக்க வீரர் முகமது நயிம் 39 ரன்களும் எடுத்தார்கள். நியூசிலாந்து அணி தரப்பில் ரச்சின் ரவிந்திரா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

142 ரன்கள் அடித்தல் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணி, வங்கதேச அணியின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல், இலக்கை அடைய போராடியது. இருப்பினும் 20 ஓவர்கள் முடிவில் நியூசிலாந்து அணி 5 விக்கெட் இழப்பிற்கு 137 ரன்கள் மட்டுமே எடுத்தது.இதனால் வங்கதேச அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 5 போட்டிகள் கொண்ட தொடரில் 2-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. இதற்கு முன்னர் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டி20 தொடரை தனது சொந்த மண்ணில் கைப்பற்றி அசத்தியது என்பது குறிப்பிடதக்கது.