கிரிக்கெட் ஜாம்பவான் "ஷேன் வார்னேவின்" இறுதி சடங்கு... நல்லடக்கம் செய்யப்பட்ட உடல்.. கண்ணீர் விட்டு கதறி அழுத தாய், மகள்!!

ஆஸ்திரேலியா கிரிக்கெட் ஜாம்பவான ஷேன் வார்னேவின் உடல் மெல்போர்னில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

கிரிக்கெட் ஜாம்பவான் "ஷேன் வார்னேவின்" இறுதி சடங்கு...  நல்லடக்கம் செய்யப்பட்ட உடல்.. கண்ணீர் விட்டு கதறி அழுத தாய், மகள்!!

பிரபல கிரிக்கெட் வீரர் ஷேன் வார்னே மார்ச் 4ஆம் தேதி மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். வார்னேவின் மறைவு கிரிக்கெட் ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்தது.

ஷேன் வார்னே தனது மூன்று நண்பர்களுடன் தாய்லாந்துக்கு சுற்றுலா போல் சென்றுள்ளார். அங்கு தங்கியிருந்த விடுதியில் தான் அவர் உயிரிழந்துள்ளார். இதனையடுத்து அவரின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக பல கோணங்களில் விசாரணை நடைபெற்று வந்தது.

ஆனால், ஷேன் வார்னே இயற்கை முறையில்  தான் மரணம் அடைந்தார் என முதல்கட்ட விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து, ஷேன் வார்னே அறைக்குள் 4 பெண்கள் சென்ற சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், வார்னே உடல் தனி விமானம் மூலம் ஆஸ்திரேலியாவுக்கு கொண்டு செல்லப்பட்டது.

இதையடுத்து வார்னேவின் இறுதிச் சடங்கு இன்று மெல்போர்னில் நடந்தது. இதில் வார்னேவின் குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் உறவினர்கள் உட்பட 80 பேர் மட்டுமே கலந்து கொள்ள அனுமதிக்கப்பட்டனர். ஷேன் வார்னே உடல் செயின்ட் கில்டாஸ் அகாடமியில் அடக்கம் செய்யப்பட்டது... அங்கு அவர் தனது கிரிக்கெட் பயிற்சியைத் முதல் முதலில் தொடங்கினார்.

வார்னேவின் இறுதி சடங்கில், அவர் உடல் அடங்கிய பெட்டியை அவரது நண்பர்கள் தூக்கி சென்றனர். அப்போது வார்னின் தாயும், மகளும் கதறி அழுதனர்.

வார்னேவின் இறுதிச் சடங்கில் கிரிக்கெட் வீரர்கள் ஆலன் பார்டர், மைக்கில் கிளார்க், மெக்ராத், மார்க் டைலர், இங்கிலாந்து வீரர் மைக்கேல் வாஹன், மார்க் வாட்ஹக் மற்றும் இயான் ஹிலி ஆகியோர் கலந்து கொண்டனர். வார்னேவுக்கு விக்டோரியா அரசு சார்பில் வரும் 30ம் தேதி மெல்போர்னில் நினைவேந்தல் நிகழ்ச்சி நடக்கிறது. இதில் ஒரு லட்சம் ரசிகர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.