டோக்கியோ ஒலிம்பிக்: பேட்மிண்டன் அரையிறுதி போட்டியில் பி.வி.சிந்து அதிர்ச்சித் தோல்வி...

ஒலிம்பிக் பேட்மிண்டன் அரையிறுதி போட்டியில் இந்தியாவின் பி.வி.சிந்து அதிர்ச்சித் தோல்வி அடைந்தார். வெண்கல பதக்கத்திற்கான போட்டியில் சீனாவின் ஹி-பிங்ஜியோவை அவர் எதிர்கொள்ள உள்ளார்.

டோக்கியோ ஒலிம்பிக்: பேட்மிண்டன் அரையிறுதி போட்டியில் பி.வி.சிந்து அதிர்ச்சித் தோல்வி...

32-வது ஒலிம்பிக் திரு விழா, ஜப்பான் தலைநகர் டோக்கியோ வில் நடைபெற்று வருகிறது. இதில் 9-வது நாள் நடைபெற்ற பெண்களுக்கான பேட்மிண்டன் அரையிறுதி போட்டியில், இந்திய நட்சத்திர வீராங்கனை பி. வி.சிந்துவுடன், சீன தைபே வீராங்கனை தாய் சூ-யிங் பலப்பரீட்சை நடத்தினார். இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய தாய் சூ-யிங், 21 க்கு 18, 21 க்கு 12 என்ற நேர்செட் கணக்கில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார். போட்டியில் தோல் வியை தழு விய பி. வி.சிந்து, நாளை நடைபெறும் வெண்கல பதக்கத்திற்கான போட்டியில் சீன வீராங்களை ஹி-பிங்ஜியோவை எதிர்கொள்ள உள்ளார்.

இதேபோல் ஒலிம்பிக் குத்துச்சண்டையில் பெண்களுக்கான 75 கிலோ எடைப்பிரி வின் காலிறுதி ஆட்டத்தில் சீன நாட்டை சேர்ந்த கியான் லி உடன், இந்திய வீராங்கனை பூஜா ராணி பலப்பரீட்சை நடத்தினார். தொடக்கத்தில் இருந்தே சீன வீராங்கனை ஆதிக்கம் செலுத்தியதால், பூஜ்ஜியத்திற்கு 5 என்ற புள்ளி கணக்கில் பூஜா ராணி தோல் வியை தழு வினார்.