"என்னங்க ரிப்போர்ட் ரொம்ப மோசமா இருக்கு".. 'சிஎஸ்கே - கேகேஆர்' புள்ளி விவரம்.. தோனி ரிபோர்டும்!!

ஐபிஎல் வரலாற்றில் கொல்கத்தாவுக்கு சிஎஸ்கே கொடுத்துள்ள மறக்க முடியாத நினைவுகளை பற்றி பாப்போம்..

"என்னங்க ரிப்போர்ட் ரொம்ப மோசமா இருக்கு".. 'சிஎஸ்கே - கேகேஆர்' புள்ளி விவரம்.. தோனி ரிபோர்டும்!!

15வது ஐபிஎல் சீசன் நாளை மறுநாள் மும்பையில் நடைபெறவுள்ளது. இதில் முதல் போட்டி சிஎஸ்கே-வுக்கும் கொல்கத்தாவுக்கும் நடக்கிறது. கடந்த சீசன் இறுதி போட்டியில் இந்த 2 அணிகள் தான் மோதிக்கொண்டன. மோர்கன் தலைமையில் பலமானதாக இருந்த கொல்கத்தா அணியை அசால்டாக ஊதி தள்ளினார் தோனி.

ஐபிஎல் வரலாற்றில் சென்னை - கொல்கத்தா அணிகள் இதுவரை 26 முறை நேருக்கு நேர் மோதியுள்ளது. இதில் தோனி தலைமையிலான சென்னை அணி 17 முறை வென்றுள்ளது. ஆனால், கொல்கத்தா அணி பல முறை கேப்டனை மாற்றியும் வெறும் 8 போட்டிகள் தான் வென்றுள்ளது. 2012 இல் கொல்கத்தா இறுதிப் போட்டியில் சென்னையை வீழ்த்தி முதல் கோப்பையை வென்றது முக்கிய வெற்றியாகும்.

கொல்கத்தாவுக்கு எதிராக சிஎஸ்கே அணிக்கு மற்றொரு சிறப்பு அம்சம் உள்ளது. அதாவது ஐபிஎல் வரலாற்றில் கொல்கத்தா அணிக்கு எதிரான 2 லீக் ஆட்டங்களில் ஒரு சீசனில் கூட சென்னை அணி தோற்றதில்லை. 2 போட்டிகளில் ஆதிக்கம் செலுத்தும் அல்லது ஒரு போட்டியை மட்டும் தவறவிடும் . இதுதான் தோனியின் சிறப்பு.

கொல்கத்தா கடைசியாக 2020-ல் சென்னையை வீழ்த்தியது. அதுவும் 10 ரன்கள் வித்தியாசத்தில். எனவே புதிய கேப்டன், புதிய படையுடன் களமிறங்கிய கொல்கத்தா அணி.. இந்த ஆண்டு தோனியின் வியூகத்தை முறியடிப்பாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.