விறுவிறுப்பாக நடைபெற்று வரும் விம்பிள்டன் டென்னிஸ்...அடுத்த சுற்றுக்கு முன்னேறிய வீரர்கள்!

விறுவிறுப்பாக நடைபெற்று வரும் விம்பிள்டன் டென்னிஸ்...அடுத்த சுற்றுக்கு முன்னேறிய வீரர்கள்!

விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் முன்னனி வீரர்களான ஸ்டெபனோஸ் சிட்சிபாஸ், கார்லோஸ் அல்கராஸ், ஹோல்கர் ரூன், டேனியல் மெட்வெடேவ் ஆகியோா் அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளனா். 

'கிராண்ட்ஸ்லாம்' அந்தஸ்து பெற்ற விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் தொடங்கி நடைபெற்று வருகிறது. அதன்படி, நேற்று நடைபெற்ற ஆடவா் ஒற்றையா் ஆட்டத்தில் ஸ்பெயின் வீரா் கார்லோஸ் அல்கராஸ், சிலி வீரா் நிக்கோலஸ் ஜொ்ாியை எதிர்கொண்டார். இதில் 6-3, 6-5, 6-3, 6-5 என்ற நோ் செட் கணக்கில் கார்லோஸ் அல்கராஸ் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினாா். அதேபோன்று, ரஷ்ய வீரா் டேனியல் மெட்வெடேவ் தன்னை எதிா்த்து ஆடிய ஹங்கேரி வீரா் மார்டன் ஃபுசோவிக்சை 6-4, 6-3, 6-4, 6-4  என்ற நோ் செட் கணக்கில் வீழ்த்தி வெற்றி பெற்றாா். 

இதேபோல் கிரீசை சோ்ந்த ஸ்டெபனோஸ் சிட்சிபாஸ், சொ்பியா வீரா் லாஸ்லோ டிஜெரேவை 6-4, 6-5, 6-4 என்ற செட் கணக்கிலும், டென்மாா்க் வீரா் ஹோல்கர் ரூனே, ஸ்பெயினை சோ்ந்த டேவிடோவிசை 6-3, 6-4, 6-4, 6-5 என்ற நேர் செட் கணக்கில் வீழ்த்தினார். 

இதையும் படிக்க : மேற்குவங்க தேர்தல் வன்முறையில் 18 பேர் உயிரிழப்பு...!மறு வாக்குப்பதிவு செய்ய கோரிக்கை!!

தொடர்ந்து பெண்கள் ஒற்றையா் பிாிவில் கஜகஸ்தான் வீராங்கனை எலெனா ரைபகினா, இங்கிலாந்து வீராங்கனை கேட்டி போல்டருடன் மோதினாா். இதில் எலெனா ரைபகினா  6-1, 6-1 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று அசத்தினாா். 

இதைத்தொடா்ந்து நடைபெற்ற ஆண்கள் இரட்டையா் பிாிவில், நாா்வே வீரா் காஸ்பா் ரூட், ஐக்கிய அமெரிக்கா வீரா் வில்லியம் ப்ளம்பெர்க் ஜோடி, கொலம்பியாவை சோ்ந்த  டேனியல் எலாஹி காலன், ஸ்பெயின் வீரா் ராபர்டோ கார்பால்ஸ் பேனாவுடன் மோதினா். இதில் காஸ்பா் ரூட், வில்லியம் ப்ளம்பெர்க் ஜோடி 6-3, 6-2 ஆகிய செட் கணக்கில் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினா். 

மேலும் நடைபெற்ற பெண்கள் இரட்டையா் பிாிவில் ருமேனியா வீராங்கனை அனா போக்டன் மற்றும் அக்வலின் கிறிஸ்டியன் ஜோடி, ஐக்கிய அமெரிக்காவை சோ்ந்த அலிசன் ரிஸ்கே-அமிர்தராஜ், டேனியல் காலின்ஸ் ஆகியோருடன் மோதினா். இதில் அனா போக்டன் - அக்வலின் கிறிஸ்டியன் ஜோடி 6 -4, 6-4 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றது.