மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் இறுதி போட்டி.. 71 ரன்கள் வித்தியாசத்தில்.. இங்கிலாந்தை வீழ்த்தி ஆஸ்திரேலியா அணி ஏழாவது முறையாக சாம்பியன் பட்டம்!!

மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் இறுதி போட்டியில் 71 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி ஆஸ்திரேலியா அணி ஏழாவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.

மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் இறுதி போட்டி.. 71 ரன்கள் வித்தியாசத்தில்.. இங்கிலாந்தை வீழ்த்தி ஆஸ்திரேலியா அணி ஏழாவது முறையாக சாம்பியன் பட்டம்!!

பெண்கள் உலகக்கோப்பை இறுதிப்போட்டி நியூசிலாந்து நாட்டின் கிறிஸ்ட்சர்ச் பகுதியில் நடைபெற்றது.

இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி ஆரம்பம் முதலே அதிரடி காட்டியது. அணியின் தொடக்க வீராங்கணைகளாக அலிக்சா ஹீலியும், ராகேல் ஹெய்னசும் அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தனர்.

சிறப்பாக விளையாடிய அலிக்சா ஹீலி 138 பந்துகளில் 170 ரன்கள் குவித்து அசத்தினார். இறுதியில் ஆஸ்திரேலிய அணி 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 356 ரன்கள் குவித்தது.

இதையடுத்து 357 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணிக்கு ஆரம்பம் முதலே அதிர்ச்சி காத்திருந்தது. தொடக்க ஆட்டக்காரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க மிடில் ஆர்டரில் களமிறங்கிய நடாலியா அணியை சரிவில் இருந்து மீட்டார்.

ரன் ரேட்டை சரியவிடாமல் இங்கிலாந்து அணி பாதுகாத்த போதிலும் தொடர்ந்து அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்து நெருக்கடியை சந்தித்தது. இதையடுத்து 43 புள்ளி 4 ஓவர்களில் இங்கிலாந்து அணி 285 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியை தழுவியது. கடைசி வரை நிலைத்து நின்று ஆடிய நடாலியா 121 பந்துகளில் 148 ரன்கள் எடுத்து அணியை ஒற்றை ஆளாக தாங்கி நின்றார். இருப்பினும் சக வீரர்கள் அவருக்கு போதிய ஒத்துழைப்பு தராததால் இங்கிலாந்து அணி தோல்வியை தழுவியது.