தெ.ஆப்பிரிக்காவுக்கு எதிரான மகளிர் உலக கோப்பை கிரிக்கெட்: கடைசி பந்து வரை போராடி இந்திய அணி தோல்வி!!

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான பரபரப்பான மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில், இந்திய அணி கடைசி பந்து வரை போராடி தோல்வியை தழுவியது. இதன்மூலம், அரையிறுதி வாய்ப்பை இழந்த இந்திய அணி, தொடரிலிருந்தும் வெளியேறி ஏமாற்றம் அளித்தது.

தெ.ஆப்பிரிக்காவுக்கு எதிரான மகளிர் உலக கோப்பை கிரிக்கெட்:  கடைசி பந்து வரை போராடி இந்திய அணி தோல்வி!!

நியூசிலாந்தின் கிறிஸ்ட்சர்ச் நகரில் நடைபெற்ற இப்போட்டியில், டாஸ் வென்ற இந்திய கேப்டன் மிதாலி ராஜ், முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

இதனையடுத்து பேட்டிங்கை தொடங்கிய இந்திய அணி, நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 274 ரன்கள் எடுத்தது. இந்திய அணி தரப்பில் ஸ்மிரிதி மந்தனா, ஷஃபாலி வர்மா, மிதாலி ராஜ் ஆகிய 3 வீராங்கனைகளும் அரைசம் விளாசி அசத்தினர். அதிகபட்சமாக ஸ்மிரிதி மந்தனா 71 ரன்கள் எடுத்தார்.

பின்னர், 275 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய தென்னாப்பிரிக்க அணி, 7 விக்கெட்டுகளை இழந்த நிலையில் கடைசி பந்தில் வெற்றி இலக்கை எட்டி திரில் வெற்றி பெற்றது. இதன்மூலம் 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற தென்னாப்பிரிக்க அணி, அரையிறுதிக்கு முன்னேறியது.

இப்போட்டியில் வென்றால் மட்டுமே அரையிறுதிக்கு முன்னேற முடியும் என்ற நிலையில் இறுதிவரை போராடிய இந்திய அணி தோல்வியுடன் தொடரில் இருந்து வெளியேறியது.