உலக பல்கலை. விளையாட்டுப் போட்டி : இந்தியாவிற்கு மேலும் 4 தங்கம்...!

உலக பல்கலை. விளையாட்டுப் போட்டி : இந்தியாவிற்கு மேலும் 4 தங்கம்...!

உலக பல்கலைக் கழக விளையாட்டுப் போட்டியில் இந்தியாவுக்கு மேலும் 4 தங்கப் பதக்கங்கள் கிடைத்துள்ளன. 


சீனாவின் செங்டு நகரில் நடைபெற்று வரும் இந்த போட்டிகளில் நேற்று நடைபெற்ற ஆடவர் வில்வித்தை காம்பவுண்டு போட்டியில், இந்திய வீரர் சங்கம்பிரீத் சிங் பிஸ்லா, மகளிர் பிரிவில் அவ்னீத் கவுர் ஆகியோர் தங்கப் பதக்கம் வென்றனர்.

மனு பாகர், இளவேனில் கலக்கல் | Dinamalar

அதேபோல்,  துப்பாக்கி சுடுதலில் மகளிருக்கான 10 மீட்டர் ஏர் ரைஃபிள் பிரிவில்  இந்திய வீராங்கணை  இளவேனில் வாலறிவன் 252.5 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்து தங்கம் வென்றார்.  

உலக பல்கலைக்கழக விளையாட்டு: இந்தியாவுக்கு 4-வது தங்கம் - Tamil News -  Latest Tamil News - Breaking News

இதேபோல், கலப்பு வில்வித்தை அணிப் போட்டியில் இந்திய அணியின் சார்பில் அமன் சைனி, பிரகதி ஜோடி தங்கம் வென்றுள்ளது.

World University Games: Sift Kaur in left alongside Manini Kaushik and Ashi Chouksey in the ride side in the picture (photo: IANS)

மேலும், அந்த வரிசையில்,  இன்று நடைபெற்ற 50 மீட்டர் ரைபிள் துப்பாக்கிச் சுடும் போட்டியில் சௌக்சே ஆஷி, கௌசிக் மணினி , சம்ரா ஷிப்ட் கவுர் ஆகியோர் அடங்கிய அணி தங்கம் வென்றது.

இதையும் படிக்க   |  ’ டீ கப்’ வழியாக மருந்து செலுத்திய மருத்துவர்கள் ....! கேட்டால் கொரோனா கால டெக்னிக் என விளக்கம்.