யாருப்பா இது.. "ஷேன் வார்னே" போல் அச்சு அசலாக பந்து வீசும் வீரர்.. அதுவும் இந்த அணியிலையா? இனி அசத்தல் தான் போ?

யாருப்பா இது.. "ஷேன் வார்னே" போல் அச்சு அசலாக பந்து வீசும் வீரர்.. அதுவும் இந்த அணியிலையா? இனி அசத்தல் தான் போ?

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் "கிரிக்கெட் ஜாம்பவனான ஷேன் வார்னே" போல் பந்து வீசும் வீரர் ஒருவர் இருப்பதாக சர்பிரைஸ் தகவல் வெளியாகியுள்ளது.

ஐபிஎல் ஏலத்தில் சிஎஸ்கே அணி 22 வயதான "பிரசாந்த் சோலங்கி"-யை 1 கோடியே 20 லட்சம் ரூபாய் கொடுத்து வாங்கியது. பெயரே தெரியாத இந்த வீரருக்கு ஒரு கோடியா என ரசிகர்கள் விமர்சனம் செய்து வந்தனர். அங்க தான் தோனியின் மாஸ்டர் பிளான் வெளிவந்துள்ளது.

வீரர்கள் அதிகம் தடுமாறுவது லெக் ஸ்பின்னில் தான்.. லெக் ஸ்பின் மூலம் ஈஸியாக விக்கெட்களை வீழ்த்தமுடியும்..அதன் காரணமாகவே லெக் ஸ்பின்னர்ஸ்-களுக்கு அனைத்து அணிகளும் முக்கியத்துவம் கொடுக்கும்.

அந்த வகையில் "கிங் ஆஃப் ஸ்பின்" என்று அழைக்கப்படும் வார்னே போல் பந்து வீசும் பிரசாந்த் சோலங்கியை சிஎஸ்கே தட்டி தூக்கியுள்ளது. இதில் ஒரு சுவாரஷியம் என்னவென்றால்... வார்னே தான் தனக்கு ரோல் மாடல் என பிரசாந்த் சோலங்கி கூறி இருக்கிறார். அவரை பார்த்து தான் சுழற்பந்துவீசவே முடிவு எடுத்துள்ளாராம்.

சிஎஸ்கேவின் நெட்பௌளராக சிறப்பாக செயல்பட்டு வந்த பிரசாந்த் சோலங்காவுக்கு தற்போது அணியிலேயே வாய்ப்பு கிடைத்துவிட்டது. 

பிரசாந்த் சோலங்கி தற்போது சிஎஸ்கே பயிற்சி முகாமில் அசத்தி வருகிறார். இதனால் பிளேயிங் லெவனில் பிரசாந்த் சோலங்கியை சேர்க்க தோனி முனைப்பு காட்டி வருகிறார். ஏற்கனவே ஜடேஜா, மொயின் அலி ஆகியோர் அணியில் உள்ள நிலையில், பிரசாந்த் சோலங்கியும் பிளேயிங் லெவனில் இடம் பெற்றால் அணி வலுப்பெறலாம் எனத் தெரிகிறது.