சொந்த ஊரில் நடராஜன் நிறுவிய கிரிக்கெட் அகாடமி: ரிப்பன் வெட்டி திறந்து வைத்த தினேஷ் கார்த்திக்!

சொந்த ஊரில் நடராஜன் நிறுவிய கிரிக்கெட் அகாடமி: ரிப்பன் வெட்டி திறந்து வைத்த தினேஷ் கார்த்திக்!

இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் நடராஜன் தனது சொந்த ஊரான சேலத்தில், புதியதாக நிறுவியுள்ள கிரிக்கெட் மைதானத்தை, இந்திய கிரிக்கெட் அணி வீரர் தினேஷ் கார்த்திக் திறந்து வைத்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் நடராஜன், தனது சொந்த ஊரான சேலம் மாவட்டம் சின்னப்பம்பட்டியில், நடராஜன் கிரிக்கெட் அகாடமியை துவங்கி கிராமப்புற இளைஞர்களுக்கு இலவசமாக கிரிக்கெட் பயிற்சி வழங்கி வருகிறார்.

இந்த நிலையில் கிராமபுற இளைஞர்களின் கிரிக்கெட் திறனை மேம்படுத்த பல்வேறு சிறப்பம்சங்களுடன் கூடிய கிரிக்கெட் மைதானம் நிறுவ முயற்சி மேற்கொண்டார். 

அதன்படி  சின்னப்பம்பட்டியில் சுமார் 4.5 ஏக்கர் பரப்பளவில் புதிதாக ஒரு மைதானத்தை, பல்வேறு சிறப்பம்சங்களுடன் நிறுவியுள்ளார். இந்த புதிய நடராஜன் கிரிக்கெட் மைதானத்தை இந்திய கிரிக்கெட் அணி வீரர் தினேஷ் கார்த்திக், இன்று ரிப்பன் வெட்டி திறந்து வைத்து கிரிக்கெட் மைதானத்தை பார்வையிட்டார். 

இந்த நிகழ்ச்சியில் இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் விஜய் சங்கர், வருண் சக்கரவர்த்தி, தமிழ்நாடு கிரிக்கெட் சங்க தலைவர் அசோக் சிகாமணி நடிகர் யோகி பாபு புகழ் மற்றும் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கப் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
 
இதையும் படிக்க || கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு : 4 பேர் ஆஜரான நிலையில் நீதிமன்றம் ஒத்திவைப்பு!