மூர்த்தி சிறிதாகினும், கீர்த்தி பெரிதே! அனைவரது கவனத்தையும் ஈர்த்து வரும் இளம் செஸ் வீரர்!

பாலஸ்தீனைச் சேர்ந்த 8 வயது இளம் செஸ் வீராங்கனை, பதற்றம் இன்றி படு பயங்கர்மாக விளையாடி வரும் நிலையில், அனைவரது கவனத்தையும் அவர் ஈர்த்து வருகிறார்.

மூர்த்தி சிறிதாகினும், கீர்த்தி பெரிதே! அனைவரது கவனத்தையும் ஈர்த்து வரும் இளம் செஸ் வீரர்!

2022ம் ஆண்டின் 44வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி, இந்தியாவில் நடக்கிறது. சதுரங்கம் கண்டுபிடிக்கப்பட்ட நாட்டிலேயே இந்த் அபோட்டி நடப்பது இது தான் முதன் முறை என்ற நிலையில், அந்த போட்டியானது, தமிழ்நாட்டின் தலைநகரில், மாமல்லபுரத்தில் நடப்பது மேலும் பெருமையளிக்கிறது.

ஜூலை 28ம் தேதி தொடங்கிய இந்த போட்டியானது, வருகிற ஆகஸ்டு 10ம் தேதி வரை, ஷெரடான் ஹோட்டலின், ஃபோர் பாயிண்ட்ஸ் என்ற விடுதியில் நடக்கிறது. 186 நாடுகளில் இருந்து 350க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் கலந்து விளையாடுகின்றனர்.

இந்திய அணி முதல் நாள் தொடங்கி தொடர் வெற்றியைச் சந்தித்து வரும் நிலையில், அனைவரது கவனத்தையும் தன் பக்கம் ஈர்த்திருக்கிறார் ஒரு 8 வயது செஸ் வீரர்.

ராண்டா செடார் என்ற பால்ஸ்தீனைச் சேர்ந்த 8 வயது சதுரங்க வீரர், இந்த 44வது சர்வதேச செஸ் போட்டியில் தனித்து தெரிந்து வருகிறார். கடந்த சனிக்கிழமை, போட்டிக்கு வந்ததில் இருந்து ஒரு சிறப்பு விருந்தினர் போல பார்க்கப்படும் ராண்டா, தனக்கு இது பிடித்திருப்பதாகக் கூறினார்.

படிப்பிலும், சதுரங்கத்திலும், ஒரே அளவிலான கவனத்தை செலுத்தி வரும் இவர், இந்த போட்டியின் இளம் வீரர் என்பது குறிப்பிடத்தக்கது. மேசை வரை கூட எட்டத இவர், நாற்காலியில் முட்டி போட்டு தான் விளையாடுகிறார். தனது ஐந்து வயது முதலே விளையாடத் துவங்கி, இன்று நாட்டின் பிரதிநிதியாகும் அளவில் முன்னேறி இருப்பதைத் தொடர்ந்து, இவரது சாந்தமான விளையாட்டு, 8 வயது குழந்தைக்கும் மேலான ஒரு முதிர்ச்சியைக் கொண்டிருப்பதாகப் பலராலும் பாராட்டப்பட்டு வருகிறார்.

தனது அணியில், தன்னை விட மூத்தவர்கள் இருக்கும் நிலையில், அவர்கள் அனைவரும் ராண்டாவை பத்திரமாகப் பாத்துக் கொள்கின்றனர். அவரது அணியில் இருக்கும் எமாம் சவன் இது குறித்து பேசுகையில், “பாலஸ்தீனில் இருந்து மகளிர் மட்டும் கொண்ட அணி ஒலிம்பியாடிற்கு வந்தது இதுவே முதன்முறை. மேலும், 8 வயது சிறுமி இந்த போட்டியில் கலந்து கொண்டதும் எங்களுக்கு சாதனை தான். வருகிற சுற்றுகளில் மேலும் கடுமையான போட்டியாளர்களுடன் போட்டியிட வேண்டும் என எதிர்பார்க்கிறோம்” எனக் கூறினார்.

இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனுக்கும் இடையில் போர் நிலவி வரும் நிலையில், அந்நாட்டு மக்கள் பல ஆண்டுகளாகத் தவித்து வருகின்றனர். இந்த நிலையில்,இந்த சிறுமியின் செய்திகள் நாட்டின் பக்கம் உலகத்தின் பார்வையைத் திருப்பி இருப்பது குறிப்பிடத்தக்கது.