ஐபிஎல்... ராஜஸ்தானை வீழ்த்திய லக்னோ...!!!

ஐபிஎல்... ராஜஸ்தானை வீழ்த்திய லக்னோ...!!!

ஐபிஎல் கிாிக்கெட் போட்டியில் நேற்றைய ஆட்டத்தில் ராஜஸ்தான் அணியை வென்று லக்னோ சூப்பா் ஜெயண்ட்ஸ் அணி வெற்றிவாகை சூடியுள்ளது. 

ஐபிஎல் கிாிக்கெட் தொடர் 16-வது சீசனில் நேற்று நடந்த ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை லக்னோ அணி எதிா்கொண்டது. இதில் முதலில் பேட்டிங் செய்த லக்னோ அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 154 ரன்கள் சேர்த்தது.

இதையடுத்து 155 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தனது ஆட்டத்தை தொடங்கிய ராஜஸ்தான் அணி  20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 144 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் லக்னோ அணி அசத்தலான வெற்றியைப் பெற்றது. 

ஐபிஎல் போட்டியில் இன்றைய ஆட்டத்தில் பஞ்சாப் அணியை பெங்களூரு அணியும், டெல்லி அணியை கொல்கத்தா அணியும் எதிா்கொள்கின்றன. இதில் வெற்றி யாா் பக்கம்? என்பதை காண ரசிகா்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனா்.