சென்னை விமான நிலையத்தில் 1 கிலோ தங்கம் பறிமுதல்...

குவைத், கொழும்பு, சார்ஜா ஆகிய நாடுகளில் இருந்து சென்னைக்கு கடத்திவரப்பட்ட ரூ. 46 லட்சத்து 15 ஆயிரம் மதிப்புள்ள 1 கிலோ தங்கம் சுங்கத்துறை அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டது.

சென்னை விமான நிலையத்தில் 1 கிலோ தங்கம் பறிமுதல்...

சென்னை  பன்னாட்டு விமான நிலையத்திற்கு குவைத்தில் இருந்து  விமானம் வந்தது. அதில் வந்த பயணிகளை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது ஒரு பெண் சோதனையில் இருந்து தப்பி செல்ல முயன்றதாக கூறப்படுகிறது.

அவரை தடுத்து நிறுத்திய சுங்கத்துறை அதிகாரிகள் அவரிடம் விசாரணை மேற்க்கொண்டனர். விசாரணையில் பெண் பயணி முன்னுக்கு பின் முரணாக பேசியதால், அவரது உடமைகளை அதிகாரிகள் சோதனை செய்தனர்.

அதில் ரூ. 18 லட்சத்தி 58 ஆயிரம் மதிப்புள்ள 488 கிராம் தங்கநகைகள் இருந்ததை கண்டறிந்த அதிகாரிகள் நகையை கைப்பற்றி பயணியிடன் விசாரணை செய்து வருகின்றனர்.

அதேபோல் சார்ஜாவில் இருந்து சென்னை வந்த விமானத்தில் பயணம் செய்த பயணியின் சூட்கேசில், பெண்கள் தலைக்கு அணியும் ஹர் பேண்ட், டியோடரன்ட் ஆகியவற்றில் 367 கிராம் தங்கத்தை மறைத்து வைத்து எடுத்து வந்தது தெரியவந்தது. அதன்மதிப்பு சுமார்.   ரூ.16 லட்சத்தி 6 ஆயிரம் என தெரிவித்த அதிகாரிகள் தங்கத்தை பறிமுதல் செய்து, கடத்தி வந்த பயணியிடம் விசாரித்து வருகின்றனர்.

அதேபோல் கொழும்பில் இருந்து சென்னை வந்த பயணியை சந்தேகத்தின்பேரில் சோதனை செய்த அதிகாரிகள், அவரது உள்ளாடைக்குள் மறைத்து வைத்து கடத்தி வந்த ரூ.11 லட்சத்து 51 ஆயிரம் மதிப்புள்ள 263 கிராம் தங்கத்தை கைப்பற்றினர்.

ஓரே நாளில் 3 பேரிடம் இருந்து ரூ. 46 லட்சத்தி 15 ஆயிரம் மதிப்புள்ள 1 கிலோ 118 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்தனர்.  இது தொடர்பாக பெண் உள்பட 3 பேரிடமும் சுங்கத்துறை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.