ரூ.108 கோடியில் காவிரி கூட்டுக் குடிநீர் பணிகள் தொடங்கி வைப்பு ..!

திருச்சி துறையூரில் சுமார் 108 கோடி ரூபாய் மதிப்பில் புதிய காவிரி கூட்டு குடிநீர் திட்ட பணிகளை அமைச்சர் கே.என்.நேரு தொடங்கி வைத்தார்.

 திருச்சி மாவட்டம் துறையூரில் நகராட்சி நிர்வாகம் குடிநீர் வழங்கல் துறை தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் சார்பில் ரூபாய் 108 கோடியே 90 லட்சம்  மதிப்பீட்டில் புதிய காவிரி கூட்டு குடிநீர் திட்ட பணிக்கான துவக்க விழா நடைபெற்றது.

நிகழ்வில் கலந்துகொண்ட நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே என் நேரு  திட்டத்தை துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார் அப்பொழுது கொள்ளிடம் ஆற்றின் நீரை ஆதாரமாகக் கொண்டு கிளியனூர் அருகில் ஐந்து நீர் உறிஞ்சும் கிணறுகள் மூலமாக துறையூர் நகருக்கு தனி காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் 16,690 மீட்டர் தொலைவிற்கு குழாய் அமைத்து குடிநீர் கொண்டு வரப்பட உள்ளது.

இத்திட்டமானது துறையூர் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளுக்கு மட்டும் செயல்படுத்தப்பட உள்ளது. இத்திட்ட பணிகள் விரைவில் தொடங்கப்பட்டு 2025 ஆம் ஆண்டு மார்ச் மாதம் முழுமை அடையும் எனவும் அதன் பிறகு துறையூர் பகுதிக்கு காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் தினமும் பொதுமக்களுக்கு குடிநீர் வழங்கப்படும் என பேசினார்.

மேலும் துறையூர் பகுதிக்கு புதிய பேருந்து நிலையம் அமைக்கவும் சின்ன ஏரியை தூர்வாரி வடிகால் நீரை மறுசுழற்சி செய்து நடைமுறைக்கு கொண்டு வரவும் புதிய புறவழிச்சாலை அமைக்கவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது எனவும் பேசினார். நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் துறையூர் எம்எல்ஏ ஸ்டாலின் குமார் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இதையும் படிக்க    | அமராவதி ஆற்றில் கழிவு நீர்; குடிநீர் வினியோகம் பாதிப்பு..!