சென்னை - திருவள்ளூர் பகுதிகளில் கார் மூலம் கடத்த முயன்ற 110 கிலோ கஞ்சா பறிமுதல்

சென்னை மற்றும் திருவள்ளூர் பகுதிகளில் கார் மூலம் கடத்தி கொண்டு வரப்பட்ட 110 கிலோ கஞ்சா-வை போலீசார் பறிமுதல் செய்து கடத்தலில் ஈடுபட்ட 3 நபர்களை கைது செய்துள்ளனர்.

சென்னை - திருவள்ளூர் பகுதிகளில் கார் மூலம் கடத்த முயன்ற 110 கிலோ கஞ்சா பறிமுதல்

ஆந்திராவில் இருந்து சென்னை வழியாக காஞ்சிபுரம், மதுரை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு கஞ்சா கடத்தப்படுவதாக நாகப்பட்டினம் பிரிவு போதைப் பொருள் தடுப்பு நுண்ணறிவுப் பிரிவு போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. 

அதனடிப்படையில் போலீசார் சென்னை-பெங்களூர் நெடுஞ்சாலையான பொன்னியம்மன் பட்டறை செக் போஸ்ட் அருகே வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த காரை மடக்கி சோதனை செய்தபோது அதில் இரு பைகளில் சுமார் 50 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது.

அதேபோல திருவள்ளூர் காக்கலூர் இடைமடை பகுதியில் நடத்திய வாகன தணிக்கையில் அவ்வழியாக வந்த மற்றொரு காரை சோதனையிட்ட போது அதிலும் இரு பைகளில் சுமார் 60 கிலோ கஞ்சா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. 

இதனையடுத்து கடத்தி வரப்பட்ட 110 கிலோ கஞ்சாவையும் பறிமுதல் செய்த போதைப் பொருள் தடுப்பு நுண்ணறிவுப் பிரிவு போலீசார் கடத்தலில் ஈடுபட்ட மதுரையைச் சேர்ந்த நிலமலை (40), ரமேஷ் (23) மற்றும் உமா ஷங்கர் (34) ஆகிய மூன்று பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.