தியாக சீலர் கக்கன் 115 வது பிறந்தநாள்...! அவரது திருஉருவ சிலைக்கு தலைவர்கள் மரியாதை..!

தியாக சீலர் கக்கன் 115 வது பிறந்தநாள்...!  அவரது திருஉருவ சிலைக்கு தலைவர்கள் மரியாதை..!

தியாக சீலர் கக்கன் 115 வது பிறந்தநாளை முன்னிட்டு மதுரை மாவட்டம் மேலூர் அருகே தும்பைப்பட்டி மணிமண்டபத்தில் உள்ள அவரது உருவசிலைக்கு, அரசின் சார்பில் தமிழக வணிகவரி மற்றும் பத்திரப் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி மற்றும் மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். 

மாலை அணிவித்து விட்டு வெளியே வந்த அமைச்சரிடம் மண்டபவாசலில் பூதமங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட ஆதிதிராவிடர் காலணி பகுதியில், போதிய குடிநீர் வசதி  செய்துத் தரக்கோரி அப்பகுதிகளைச் சேர்ந்த 30க்கும் மேற்பட்ட பெண்கள் கோரிக்கை வைத்தனர் கொட்டாம்பட்டி வட்டார வளர்ச்சி அலுவலர் செல்லப்பாண்டியை அழைத்து உடனடியாக குடிநீர் குழாய் அமைத்து குடி நீர் வழங்கிட அமைச்சர் உத்தரவு பிறப்பித்தார்.

 பின்னர்  பூதமங்கலம் ஊராட்சிக்குட்பட்ட அட்டவணைப் பிரிவு சமூக பெண்கள், குடிநீர் வசதி செய்து தருமாறு அமைச்சரிடம் கோரிக்கை விடுத்தனர். இதை ஏற்றுக் கொண்ட அமைச்சர் அப்பகுதிக்கு உடனடியாக  குழாய் அமைத்து, குடிநீர் வழங்க உத்தரவிட்டார்.

இந்நிலையில்,  தும்பைப்பட்டி மணிமண்டபத்தில் உள்ள அவரது உருவச் சிலைக்கு அதிமுக சார்பில் ராஜன் செல்லப்பா எம்எல்ஏ, பெரியபுள்ளான் எம்எல்ஏ மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அப்போது, அதிமுக நிர்வாகிகள் மற்றும்  தொண்டர்கள்  பங்கேற்றனர். 

அப்போது ,  எம் எல் ஏ ராஜன் செல்லப்பாவிடம் செந்தில் பாலாஜியின் கைது நடிவடிக்கைக்கு பின் அவரின் இலக்குகளை பறித்தது மூலமாக அரசு தப்பிக்க வாய்ப்பிருக்கிறதா ?  என செய்தியாளர் கேட்ட கேள்விக்கு ;-

இது அரசுக்கு ஆபத்து அல்ல, ஆனால் விபத்து. இது போன்ற விபத்துகள் இனி அரசுக்கு அடிக்கடி நேரும்  எனவும் விமர்சித்தார். செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராக தொடருவார் என ஆளுநர் ஒப்புதல் இல்லாமல் மரபு மீறி தமிழக முதல்வர் தன்னிச்சையாக  அறிவிப்பு செய்துள்ளார். இது இதுவரை நடைமுறையில் இல்லாதது என்றும்,  என ராஜன் செல்லப்பா எம்எல்ஏ செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

இதையும் படிக்க    | "சட்டமன்றத் தேர்தலில் நடிகர் விஜய் பங்கேற்பார்...! " - தயாரிப்பாளர் கே ராஜன்.