12 ஐ.பி.எஸ் அதிகாரிகள் அதிரடியாக இடமாற்றம்...!

12 ஐ.பி.எஸ் அதிகாரிகள் அதிரடியாக இடமாற்றம்...!

தமிழ்நாட்டில் உளவுத்துறை ஐஜியாக இருந்த ஆசியம்மாள் அமலாக்கத்துறை ஐ.ஜியாகவும், காத்திருப்போர் பட்டியலிருந்த செந்தில்வேலன் உளவுத்துறை ஐ.ஜி யாக நியமித்து, மொத்தம்  12 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது...

ஐ.பி.எஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம்:

ஐ.பி.எஸ் அதிகாரிகள் 12 பேரை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த பணியிடை மாற்றம் குறித்து செயலாளர் பனீந்திர ரெட்டி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், மத்திய பணியில் இருந்து வந்து காத்திருப்போர் பட்டியலில் இருந்த செந்தில் வேலன், உளவுத்துறை ஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார். அதேபோல் உளவுத்துறை ஐஜியாக இருந்த ஆசியம்மாள், அமலாக்கப் பிரிவு ஐஜியாக மாற்றப்பட்டுள்ளார்.

மேலும் ஆவடி சிறப்பு காவல் படை கமாண்டன்டராக இருந்த ராதாகிருஷ்ணன், தமிழ்நாடு சீருடைப் பணியாளர் வாரிய எஸ்.பி.யாக மாற்றப்பட்டுள்ளார். சைபர் கிரைம் எஸ்.பி.யாக இருந்த தேஷ்முக் சேகர் சஞ்சய், திருவல்லிக்கேணி துணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். கட்டாயக் காத்திருப்பில் இருந்த கண்ணன், காவல் நவீனமாக்கல் பிரிவு உதவி ஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

இதேபோன்று உதவி எஸ்.பி.யாக இருந்த 7 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு எஸ்.பி.யாக பதவி உயர்வும் அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.