காயிதே மில்லத்தின் 127வது பிறந்த தினம்.. தமிழக அரசு சார்பில் முதல்வர், அமைச்சர்கள் மரியாதை!!

காயிதே மில்லத்தின் 127வது பிறந்த தினத்தை முன்னிட்டு, சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள அவரது நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் போர்வை போர்த்தி மரியாதை செலுத்தினார்.

காயிதே மில்லத்தின் 127வது பிறந்த தினம்.. தமிழக அரசு சார்பில் முதல்வர், அமைச்சர்கள் மரியாதை!!

கண்ணியத்தென்றல் என்று அழைக்கப்படும் கண்ணியத்திற்கு காயிதே மில்லத்தின் 127-வது பிறந்தநாள் இன்று தமிழகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது.

இதையொட்டி சென்னையில் உள்ள அவரது நினைவிடம் சென்ற முதல்வர் ஸ்டாலின், மலர் போர்வை போர்த்தி மரியாதை செலுத்தினார். இதில் அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, பி.கே.சேகர் பாபு, மா.சுப்பிரமணியன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இதைத் தொடர்ந்து அதிமுக சார்பில் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி,மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, விசிக தலைவர் திருமாவளவன் ஆகியோரும் காயிதே மில்லத் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர்.

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், கமிஷன், கலெக்ஷன், கரப்ஷென் தான் திமுக‌ எனவும், திமுகவின் ஊழல் விவகாரங்களை ஏற்கனவே ஆளுநரிடம் கொடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். அதேபோல்  2026 சட்டமன்ற தேர்தலில் பாஜக ஆட்சியை கைப்பற்றும் என கனவு கண்டு வருவதாகவும் விமர்சித்துள்ளார்.